Categories: Cinema News latest news

கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் எல்லாம் செல்வராகவனுக்குப் பிறகுதான்… புளூசட்டைமாறன் பளார்!

கேங்ஸ்டர் படங்களின் ஹெட்மாஸ்டர் இந்தப் படம்தான் என புதுப்பேட்டை படத்தைச் சொல்கிறார் புளூசட்டை மாறன். அதுமட்டும் அல்லாமல் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என இன்றைய இளம் இயக்குனர்கள் தான் கேங்ஸ்டர் படங்களைப் பெரும்பாலும் இயக்கி வருகிறார்கள்.

ஆனால் இவர்களது படங்களை எல்லாம் விட இயக்குனர் செல்வராகவனின் படம்தான் பெஸ்ட். அவரது புதுப்பேட்டை படம் மாதிரி இனி எவராலும் எடுக்க முடியாது. ஏன் செல்வராகவனே நினைத்தாலும் எடுக்க முடியாது என்று பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான புளூசட்டைமாறன் தெரிவித்துள்ளார். இவர் இதுபற்றி மேலும் என்ன சொல்கிறார்னு பாருங்க.

செல்வராகவனின் சிறந்த படைப்புன்னா அது புதுப்பேட்டை தான். தனுஷின் விஸ்வரூப நடிப்பு. அரசியல் ஆதாயத்துக்காக கூலிப்படையாகப் பயன்படுத்தப்படுவோரின் வாழ்க்கையை வெகு இயல்பாக சித்தரித்த படைப்பு. கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்றோர் எடுப்பது எல்லாம் செயற்கையான கேங்ஸ்;டர் படங்கள். அதாவது ஏஐ. இதன்பிறகு வந்த பல கேங்ஸ்டர், அரசியல் படங்கள் இந்த உச்சத்தைத் தொட இயலவில்லை என்கிறார் புளூசட்டை மாறன்.

2006ல் செல்வராகவன் கதை எழுதி இயக்கிய புதுப்பேட்டை வெளியானது. தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம்பெருமாள், பாலா சிங், விஜய்சேதுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனின் அடியாளாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். பின்னணி இசையும் கலக்கல்.

புதுப்பேட்டை படத்தின் சிறப்பு என்னன்னா படத்தில் நடித்த நடிகர்களைப் பார்க்கும்போது நமக்கு உண்மையிலேயே அவர்கள் ரவுடிகள்தானா என எண்ணத் தோன்றும். படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் பேசப்படும் படமாக உள்ளது. இதற்குக் காரணம் செல்வராகவனின் இயக்கம்தான். ஆனந்த விகடன் அப்போது இந்தப்படத்துக்கு 100;க்கு 45 மதிப்பெண்கள் கொடுத்துள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v