சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அது கைநழுவிப் போனது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
அஜீத் படமான விடாமுயற்சியை விக்னேஷ் சிவன்தான் பண்ணிருக்கணும். ஆனா அவரு கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டாரு. தொழில்ல ஆர்வமா இல்லை. தலைவியைக் கூட்டிட்டு ஒவ்வொரு நாடா சுத்துறாரு. இங்க வந்து பல விளம்பரப் படங்களா எடுத்துக்கிட்டாரு.
இவருக்கிட்ட படத்தைக் கொடுத்தா செட்டாகுமான்னு கேள்வி எழுந்தது. இன்னொன்னு லைகா நிறுவனம் அவருக்குத் தேவையான அளவு டைம் கொடுத்தாங்க. நீங்க கதையை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. ஏன்னா முதல் பாதி வரை சொன்னாரு. அடுத்த பாதி சொல்லல.
மகிழ்திருமேனி: அஜீத்தும் அது நல்லாருக்குன்னாரு. அது என்ன காரணத்தாலோ தெரியல. தள்ளித் தள்ளிப் போயிடுச்சு. அப்புறம் ஒரு கட்டத்துல விக்னேஷ் சிவன் வேணாங்கற முடிவை எடுக்குறாங்க. அதுக்கு அப்புறம்தான் ஒருவழியா மகிழ்திருமேனி உள்ளே வராரு. இப்போ ரசிகர்களோட பார்வை எப்படி இருக்குன்னா ‘யப்பா அந்த ஆளே டைரக்ட் பண்ணிருந்தா கூட ஓரளவு நியாயமா பண்ணிருப்பாரு.
மேஜிக் இருக்கு: இவ்வளவு இழிவா தலைவரைக் காமிச்சிருக்க மாட்டாரே’ன்னு ஒரு பக்கம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப விக்னேஷ் சிவனுக்கு இந்த விஷயத்தைப் பார்த்துக்கிட்டு இருக்காருல்ல. அதனால அவரு ஒரு கருத்தை இன்ஸ்டால போடுறாரு. என்னன்னா ஒண்ணு கிடைக்கலன்னு வருத்தப்படாதீங்க. பின்னால மேஜிக் இருக்குன்னு சொல்றாரு.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி: அப்படின்னா இந்தப் படம் ஓடாதுங்கறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்குது. இது மைன்ட் வாய்ஸ். இதை வெளியில சொல்ல முடியுமா? இந்தப் படம் சூப்பரா இருக்கு. அஜீத்துக்கு ரொம்ப பொருத்தமான படம்னு சொன்னாரு. ஆனா என்ன இருந்தாலும் நமக்குக் கிடைக்காத ஒரு விஷயம் இன்னொருவருக்குக் கிடைத்து அது தோல்வியாகும்போது மகிழ்ச்சி வரத்தானே செய்யும்.
விக்னேஷ் சிவன்: அவன்தானே மனுஷன். யாருமே கடவுள் கிடையாதுல்ல. எல்லாருக்குள்ளேயும் ஒரு சராசரி மனிதன்தானே உள்ளே இருக்கு. அதனால விக்னேஷ் சிவன் வந்து ரொம்ப ஹேப்பியா கதவை சாத்திக்கிட்டு டான்ஸ்கூட ஆடியிருக்கலாம்னுதான் நான் நினைக்கிறேன் என்கிறார் அந்தனன்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…