Categories: Cinema News latest news

அஜீத் ரசிகர்களிடம் எதை விரும்புவார்னு தெரியுமா? பிரபலம் ஓபன் டாக்

அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அஜீத்குமார். திரையுலகில் யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனி ஆளாக முயற்சி செய்து படிப்படியாக முன்னுக்கு வந்தவர் தான் அஜீத். இவரது ஆரம்ப காலப் படங்கள் சுமாராகப் போனாலும் தீனா படத்துக்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க ஆரம்பித்தார்.

அப்போது அவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க ஆரம்பித்தது. உடனே அஜீத்தை ரசிகர்கள் அந்தப் படத்தில் அழைப்பது போல தலன்னு அழைக்க ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து அவருக்குப் பல படங்கள் சூப்பர்ஹிட்டானது.

அந்த வகையில் ரசிகர்கள் மன்றத்தை ஒரு கட்டத்தில் சில காரணங்களால் கலைத்து விட்டார் அஜீத். அஜீத்தின் மேலாளர் என்ன சொல்றாருன்னு பாருங்க… குடும்பத்தைக் கவனிங்க. பிள்ளைகளை நல்லா படிக்க வைங்கன்னு சொன்னார். அதன்பிறகு அஜீத் என்னை ஏகே, அஜீத்னு அழைத்தால் போதும்.

ஆசைப்பட்டார்: எந்தவிதமான பட்டமும் தேவையில்லை என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டார். அதே நேரம் அஜீத் தனது ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

லவ் இஸ் நாட் ரொமான்ஸ். இட்ஸ் கேர் என்பது தான் அஜீத்தின் நிலைப்பாடு. ஒரு 5 வருஷமாகவே பெண்களை மதிக்கும் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டார். அஜீத்சார் தலன்னு கூப்பிடாதீங்கன்னு சொன்னாரு. கேட்டாங்க.

சந்தோஷப்படுவார்: அஜீத்தே கடவுளேன்னு சொல்லாதீங்கன்னு சொன்னாரு. கேட்டாங்க. அதே மாதிரி இந்தப் படத்தைப் பார்த்துட்டு அஜீத் சாரோட ரசிகர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்தின் விடாமுயற்சி இன்று வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹாலிவுட் லெவலில் படம் உள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்தப் படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. இன்னும் சில நாள்களில் படத்திற்கான வெற்றி எப்படி உள்ளதுன்னு தெரிய வரும்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v