இந்தியன் 3 படத்தை எப்படியாவது திரையரங்கிற்குக் கொண்டு வர வேண்டும் என்று தான் இயக்குனர் ஷங்கர், கமல் இருவரும் நினைக்கின்றனர். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ டைரக்டா ஓடிடிக்கு கொண்டு போயிடலாம்னு நினைக்குதாம். இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
ஷங்கர் நடித்த இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் வெற்றி அடையல. இதனால் அவர்மீதான நம்பிக்கை மாறிடுச்சா என்னன்னு தெரியல. இந்தியன் 3ல பல காட்சிகள் எடுத்துருக்கு. சில காட்சிகள் படமாக்க வேண்டிய சூழல் இருக்கு.
கௌரவக் குறைச்சல்: இந்தியன் 2 பிளாப் ஆனதால இந்தியன் 3க்கு இதுவரை எடுத்ததை மட்டும் வச்சி மேனேஜ் பண்ணி டைரக்டா ஓடிடிக்கு கொண்டு போயிடலாம்னு முயற்சிகள் பண்ணினாங்க. ஆனா இதுக்கு கமல், ஷங்கர் இருவரும் ஒத்துக்கல. தன்னோட படம் டைரக்டா ஓடிடிக்கு வருவது ரெண்டு பேருக்குமே கௌரவக் குறைச்சலா இருக்கு.
ரெட்ஜெயண்ட்: அப்படி வந்துச்சுன்னா அவங்களோட மற்ற படங்களின் வியாபாரங்கள் கூட பாதிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. கமலிடம் இந்தத் தகவல் சொல்றாங்க. அவரு ஒத்துக்கல. லைகா நிறுவனம் இருந்தாலும் முழுக்க முழுக்க ரெட்ஜெயண்ட் நிறுவனத்தையே சார்ந்துள்ளது.
விடாமுயற்சி தோல்வி: ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து கமல், ஷங்கர், செண்பகமூர்த்தி, தமிழ்குமரன், சுபாஸ்கரன் இவங்க எல்லாம் சேர்ந்து வீடியோ கால்ல பேசுறாங்க. இன்னைக்கு விடாமுயற்சி தோல்வி வந்து லைகாவையே அசைத்துப்பார்த்து விட்டது. அதனால இனியும் இந்தியன் 3க்கு எத்தனை கோடி தேவை என்றாலும் கொடுக்க முடியாத சூழலில் உள்ளது.
சம்பளத்தைக் குறைக்க முடிவு: அதனால் ரெட்ஜெயண்ட் கைக்கு மாறியது. அவங்க என்ன சொல்றாங்கன்னா பாடல் காட்சிக்கு நிறைய ஷங்கர் செலவு பண்ணுவாரு. அதனால ஒரு பாடல் எடுக்க வேண்டி இருக்கு. அது வேண்டாம். அதுமட்டும் இல்லாம கொஞ்சம் பேட்ஜ் ஒர்க் பண்ணி, கமல், ஷங்கர் சம்பளத்தையும் வெகுவாகக் குறைக்கலாம்னு முடிவு செய்து விட்டாங்க.
வணிகரீதியாக வெற்றி: அதுக்கு கமல், ஷங்கர் ஒத்துக்குவாங்களான்னு தெரியல. இருவரும் சம்பள விஷயத்தில் கறாரானவர்கள். இந்தியன் 3லதான் நல்ல காட்சிகள் நிறைய இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதனால இது வணிகரீதியாக வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கு. எதிர்பார்ப்பே இல்லாம இருக்குறதுதான் இந்தப் படத்துக்குப் பெரிய பிளஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…