ரஜினியைப் பற்றி சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இவர் பாலிவுட்டில் கவர்ச்சியாக பல படங்களை இயக்கியுள்ளார். அதுல ரங்கீலா படப் புகழ் என்று கூட இவரைச் சொல்லலாம். இந்த சர்ச்சை குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
ஒரு காலத்தில் லோகேஷ் கனகராஜாக இருந்த ராம்கோபால் வர்மா பிட்டுப் படம் எடுக்குறவரா மாறி இருக்காரு. இன்னொரு முக்கியமான வேலை என்னன்னா தமிழ்நாட்டின் மிஷ்கினா மாறி கண்ட நேரத்திலும் கண்டதையும் பேசி இருக்காரு. அப்படி சமீபத்தில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியைப் பற்றிப் பேசியது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
ரஜினியால முடியாது: ஸ்லோமோஷன் மட்டும் இல்லன்னா ரஜினியால தாக்குப்பிடிக்க முடியாது. அப்படின்னு சொல்றாரு. அவரு ஒரு நல்ல நடிகர் கிடையாதுங்கற அளவுக்கு சித்தரிக்கிறாரு. இந்தியாவிலேயே புகழ்பெற்ற நடிகரான ரஜினியை இப்படி அவர் கேவலமா விமர்சிப்பதற்கு அவருக்கு எப்படி மனசு வந்ததுன்னு தெரியல.
ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகராகத் தான் அவரால பரிணமிக்க முடியும். ஒரு சிறந்த நடிகராக இல்லைன்னும் சொல்கிறார். ஒரு நடிகராக அவரால் பரிணமிக்க முடியாதுன்னு தொடர்ந்து சொல்றாரு. ரஜினி நடிச்ச எத்தனையோ சூப்பர் படங்கள் வந்துருக்கு.
ஸ்டார் அந்தஸ்து: முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, ஜானி எல்லாம் இருக்கு. ராகவேந்திரா படம் எல்லாம் நடிச்சாரு. ஆனா அது ஓடல. ஒரு கட்டத்தில் தனது ரசிகர்களின் விருப்பத்தை உணர்ந்து நடிக்க ஆரம்பிச்சாரு.
அதனாலதான் தொடர்ந்து ஸ்டார் அந்தஸ்து உள்ள படங்களில் நடிக்கிறார். அது தவிர அவருக்கு நடிக்கத் தெரியலன்னு அவர் சொல்லும் பழியை ஏற்றுக் கொள்ள முடியல. இந்நேரம் நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாவது ஒரு கண்டனத்தைத் தெரிவித்து இருக்கலாம்.
வாய் மட்டும் பேசுது: ராம்கோபால் வர்மா என்ன வேணாலும் சொல்லிட்டுப் போறாரு. நமக்கென்ன என்ற இடத்தில் அவர் இல்லை. ஒரு காலத்தில் புகழ்பெற்ற இயக்குனரா இருந்தாரு. இப்பவும் அவர் வாயை வச்சிக்கிட்டுப் புகழ்பெறும் இடத்தில்தான் இருக்காரு. ஒரு காலத்தில் அவரது படங்கள் பேசின. இப்போ அவரது வாய் மட்டும் பேசுது.
பேசும் அளவு தரம் வாய்ந்தப் படங்களை அவர் எடுக்கல. பிட்டுப் படம் ரேஞ்சுக்குத் தான் எடுத்துக்கிட்டு இருக்காரு. எதையாவது ஒரு கருத்தைச் சொல்லி லைம்லைட்ல இருக்கணும்னு நினைக்காரு.
ஓபனா பேசுறாரு: ஒரு கட்டத்துல பெண்களது மூளை பிடிக்காது. உடலைத் தான் பிடிக்கும்னு ஓபனா பேசுறாரு. எப்படி பெண்ணியவாதிகள் எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருக்காருன்னு தெரியல. ரஜினியைப் பற்றிப் பேசுற இவருக்கு அஜீத், விஜயைப் பற்றிப் பேச முடியுமா? அஜீத்தைப் பற்றி எல்லாம் பேசிட்டு நிம்மதியா தூங்க முடியுமா? அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…