Categories: Cinema News latest news

கடைசியில் சார்லி சாப்ளின் கதைதான் மைக் மோகனுக்கும்..? இனி என்ன செய்வார்?

மைக்கைக் கையில் எடுததுப் பாட ஆரம்பித்துவிட்டால் அங்கு இவர் தான் நாயகன். கமல், ரஜினி படங்களுக்கே டப் கொடுத்து விடுவார். இவரது படம் வெள்ளி விழாதான். அதனாலேயே இவரை வெள்ளி விழா நாயகன் என்று அழைத்தனர்.

‘உதயகீதம் பாடுவேன்’ என்று இவர் மைக்கைப் பிடித்துப் பாடும்போது நமக்கே அவர்மீது இனம்புரியாத ஈர்ப்பு உண்டாகும். அவ்ளோ ஒரு ரசனை அவரது பாடிலாங்குவேஜில் இருக்கும். ‘நிலாவே வா…’ என்று அவர் சோகம் கலந்து பாடும் காதல் பாடல் நம் நெஞ்சை இன்றும் வருடுகிறது.

இவர் தன் சுயத்தைக் காட்டி உருவம் படத்தில் நடித்தார். படம் பிளாப் ஆனது. அதன்பிறகு இவருக்கு சொல்லும்படி எதுவும் வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோட் படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால் படம் ஹிட்டானது. இவருக்கு பெரிய வரவேற்பு இல்லை.

கோட் படத்தில் நீண்ட தாடி வைத்துக் கொண்டு வந்தார். ஆனால் யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அது கம்பேக் ஆகவில்லை. அதற்கு முன் ஹரா என்ற திகில் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதுவும் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை.

சார்லி சாப்ளின் ஹாலிவுட்டில் மிகச்சிறந்த நகைச்சுவை ஜாம்பவான். கமல் கூட இவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து புன்னகை மன்னனில் சாப்ளின் என்று ஒரு கேரக்டரில் நடித்து இருந்தார்.

இவரது படங்களைப் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. எல்லாமே ஆக்ஷனில் கொண்டு வந்திருப்பார். டயலாக்கே இவருக்குத் தேவையில்லை. இவரைப் பற்றிய ஒரு வருத்தமான தகவல் உண்டு. சார்லி சாப்ளினின் மாறுவேடப் போட்டி நடந்ததாம். அதில் அவரே கலந்து கொண்டாராம். ஆனால் அவர் தோற்றுப் போய் விட்டாராம்.

அது மாதிரி தான் இப்போது மைக் மோகனின் கதையும் ஆகி விட்டது. அவருக்கு சுரேந்தர் டப்பிங் கொடுத்த வரை உச்சத்தில் இருந்தார். அதுதான் அவரது உண்மையான முகம் என மக்கள் நம்பினர்.

ஆனால் உண்மையான குரலில் பேசி நடித்ததும் அதற்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. மௌனராகத்தில் சந்திர குமாராக நடித்த மோகன் மீண்டும் வெள்ளி விழா நாயகனாக ஜொலிப்பாரா? மௌனராகம் சந்திரகுமாராக மாறுவாரா என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v