Categories: Cinema News latest news

அன்று தீதான் பாடியிருக்கணும்.. ‘முத்த மழை’ பாடல் குறித்து சின்மயி சொன்ன தகவல்

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தில் அமைந்த முத்தம மழை பாடலை பாடியதன் மூலம் ஒரே நாளில் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார் பாடகி சின்மயி. இதற்கு முன் தமிழ் சினிமாவில் என்றுமே மறக்க முடியாத சில ரொமான்டிக் பாடல் காதல் பாடல் என பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் சின்மயி.

குறிப்பாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட். அந்தப் பாடலுக்குப் பிறகு சின்மயியின் குரல் எட்டுத்திக்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அவருடைய குரலில் எத்தனையோ மெல்லிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அத்தனையுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் தமிழ் சினிமாவில் அவர் பாடுவதற்கும் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் அவர் கூறிய சில உண்மைகள். அதைப் பற்றி சின்மயி சில ஆண்டுகளுக்கு முன் பல உண்மைகளை நான் கூறியதனால் என்னை பேன் செய்து வைத்திருந்தார்கள். இருந்தாலும் அந்த உண்மைகளை நான் வெளியே சொன்னதற்கு காரணம் என்னை போல் இன்னும் நிறைய பேர் எதையும் தைரியமாக வெளியே சொல்ல வர வேண்டும் என்பதற்காகத்தான் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை பாடலை அன்று தீதான் பாடியிருக்க வேண்டும். அன்று அவர் ஊரில் இல்லை. அதனால் நான் பாடினேன். இருந்தாலும் எனக்கு கிடைத்த அந்த வரவேற்பு என்னால் இன்னுமும் நம்ப முடியவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி, ஸ்ரேயா கோஷல் குரல்களை விழுங்கக்கூடிய ஒரு பாடகியாக தீ வலம் வருவார் என சின்மயி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்