Categories: Cinema News latest news

சீயான் விக்ரமுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தது அந்த சினிமாவா? பிரபலம் ‘பளிச்’ தகவல்

விக்ரம் ஆரம்பத்தில் நடிக்க வந்த புதிதில் வெளியில் தெரியாமல் இருந்தார். விக்ரம் என்றால் அது எந்த நடிகர்னுதான் கேட்பாங்க. அவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் படங்கள் ஹிட் ஆகின. அதன்பிறகுதான் அவர் விக்ரமாக வெளியில் தெரிந்தார்.

தனியிடம்: அந்நியன், பிதாமகன், ஐ, சாமி போன்ற படங்கள் வந்ததும் அப்படித்தான். இடையிடையே சில கமர்ஷியல் படங்களையும், அதிரடி ஆக்ஷன் படங்களையும் கொடுத்து தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார் விக்ரம்.

மீரா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். ‘ஆகா ஓ பட்டர்பிளை’ என்ற பாடல் இதில் தான் வரும். அந்தப் படத்தில்தான் ஓரளவு விக்ரம் என்று ஒரு ஹீரோ நடிக்கிறார் என்று தெரிந்தது. அதன்பிறகு காணாமல் போனார். அப்புறம் அவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்தது சேதுதான்.

சேது: பாலாவின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் உடலை வருத்தியபடி நடித்து இருந்தார் விக்ரம். இது அவரை தமிழ்சினிமா உலகில் ஒரு இடத்தைத் தந்தது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்தவகையில் நடிகர் விக்ரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறும் ஒரு தகவல் சுவாரசியமாக உள்ளது. என்னன்னு பாருங்க.

கமலுக்கு அடுத்த இடம்: சிவாஜிக்கு அடுத்த இடத்தில் கமல் இருந்ததைப் போல இன்றைக்கு கமலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் விக்ரம். இவர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் லைவ் சினிமா என்று பார்த்து இருக்கிறோம். மலையாளப்படங்களைப் பொருத்த வரைக்கும் லைவ் வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் விக்ரம்.

மெத்தடு ஆக்டிங்: மலையாளப் படங்களைப் பொருத்தவரைக்கும் அவ்வளவு யதார்த்தமான சினிமா மேக்கிங். ஒவ்வொரு பிரேமும் நிஜவாழ்க்கைக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கும். மெத்தடு ஆக்டிங் பற்றி அதிகமா தெரியாம இருந்தபோதே அங்கு மெத்தடு ஆக்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

மலையாள சினிமா: நான் நடிப்புத்திறனைக் கத்துக்கிட்ட ஸ்கூல்னா அது மலையாள சினிமாதான். ஒரு கதாபாத்திரத்திற்கு எப்படி பட்ட நடிப்பு தேவையோ அதை என்னால கொடுக்க முடியுதுன்னா அதுக்கு என்னைத் தயார்படுத்தியது மலையாள சினிமா தான் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் விக்ரம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v