தளபதி விஜயின் சினிமா கேரியரின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் கோட் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காமல் இருக்கும் நிலையில் விஜயின் அரசியல் வாழ்க்கை துவக்கத்திலேயே ஆட்டம் கண்டு இருப்பதாக பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த அவர் கூறும் போது, கோட் திரைப்படத்தின் முதற்கட்ட அறிவிப்பு நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் படத்தின் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் விமர்சிக்கப்படுவது படக்குழுவையே அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. யுவன் சங்கர் ராஜாவே தன்னை இவ்வாறு மோசமாக விமர்சிப்பார்கள் என நினைக்கவில்லை என கருத்து தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு படக்குழுவும் தர்ம சங்கடமான நிலையில் இருக்கின்றனர்.
படத்தின் பாடல்களை விஜய் தான் முடிவு செய்தார் என்றாலும் முதல் சிங்களில் பிரச்சனை ஏற்பட்ட போதே அடுத்தடுத்த பாடல்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை கொடுக்க வேண்டியது படக்குழுவின் வேலைதான். அதை சரி செய்யாமல் தொடர்ந்து ரசிகர்கள் விமர்சிக்கும் படி அவர்கள் மூன்று சிங்களிளையும் கொடுத்திருப்பது என்ன மாதிரியான மனநிலை என தெரியவில்லை.
இது ஒரு புறம் இருக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அதை முன்கூட்டியே அறிவித்த மாநாடு நடக்கும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியும். படத்தின் பிரச்சினையால் அரசியல் நகர்வை சரியாக யோசிக்கக் முடியாத நிலையில் விஜய் இருக்கிறார். இதனால்தான் கோட் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனை கூட நடத்த வேண்டாம் என கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கோட் திரைப்படத்தினை முடித்துக்கொண்டு தவெக மாநாட்டை பல இடங்களில் நடத்த விஜய் தரப்பு முடிவெடுத்திருந்தது. இதற்கான சாப்பாடு ஆர்டர் கூட சொல்லிவிட்டதாக தகவல்கள் கசிந்தது. இருந்தும் அடுத்த கட்ட அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமலே இருக்கிறது. இது குறித்து விசாரித்தபோது, விஜய் என்பதால் கூட்டம் பெரிதாக இருக்கும் அதற்கு ஏற்ற மாதிரியான இடம் இன்னும் கிடைக்கவில்லை.
அது மட்டும் அல்லாமல் பிரபல அரசியல் தலைகள் விஜய்க்கு இடம் கொடுக்கக் கூடாது என மிரட்டுவதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. இதனால் தான் மாநாடு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகாமலே இருக்கிறது. விரைவில் இது குறித்து விஜய் தரப்பு முடிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…