Connect with us

Cinema News

‘லியோ’ படத்தில் நடந்த ஸ்கேம்.. பாலியல் வன்கொடுமை.. புட்டு புட்டு வைத்த பிரபலம்

தற்போது டான்ஸ் மாஸ்டர் யூனியன் சங்கத்திற்குள் ஒரு பெரிய புரளியே ஏற்பட்டு வருகிறது. கௌரி சங்கர் என்ற ஒரு நடன இயக்குனரை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அடித்ததாகவும் அவர் மீது புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த டான்ஸ் யூனியன் சங்கம் தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கின்றனர்.

தினேஷ் மாஸ்டர் இத்தனைக்கும் நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். ஒரு தலைவராக இருந்து இந்த மாதிரி இன்னொரு சக நடன இயக்குனரை அடித்தது பெரிய தவறு. அதை தட்டி கேட்க யாரும் முன் வரவில்லை. அதனால் இதை பெப்சி சங்கத்திடம் கொண்டு போய் சேர்த்தாலும் பெப்சி சங்கத்தின் தலைவர் செல்வமணி நடுநிலையாக இருந்து அவருடைய வேலையை செய்யாமல் தினேஷ் மாஸ்டருக்கு சாதகமாக பேசி வருகிறார்.

இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் செல்வமணி தான் என்றும் நடன இயக்குனர் சங்க உறுப்பினர்கள் செல்வமணி மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர். நடன இயக்குனர் கௌரிசங்கரை தினேஷ் மாஸ்டர் அடித்ததற்கான காரணம் என்ன என்பதையும் மற்ற உறுப்பினர்கள் கூறி இருக்கிறார்கள். நடன இயக்குனர் சங்கத்தின் சீர்கேடு அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் இதையெல்லாம் கௌரி சங்கர் தட்டி கேட்டிருக்கிறார்.

அதனால் தான் தினேஷ் மாஸ்டர் அவரை அடித்ததாக மற்ற உறுப்பினர்கள் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல அங்கு நடக்கும் சீர்கேடு பிரச்சினைகளை தட்டிக் கேட்க அதற்கும் தினேஷ் மாஸ்டர் சரியான பதிலை கூறவில்லை. அதனால் நீங்கள் நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் இல்லை என கௌரி சங்கர் கூறினாராம். அந்த கோபத்தில் தான் கௌரிசங்கரை தினேஷ் மாஸ்டர் அடித்ததாக சொல்லப்படுகிறது.

அப்படி நடன இயக்குனர் சங்கத்தில் என்ன சீர்கேடு நடந்தது என்று கேட்டதற்கும் தினேஷ் மாஸ்டருக்கு முன்னாடி மாரி என்ற ஒருவர்தான் தலைவராக இருந்திருக்கிறார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு இப்போது இருக்கிற தலைவரான தினேஷ் மாஸ்டர் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமாம். ஆனால் தினேஷ் மாஸ்டர் அதில் கையெழுத்து போட மறுத்து விட்டாராம்.

dinesh

dinesh

ஏனெனில் மாரியும் தினேஷ் மாஸ்டரும் நண்பர்களாம். அதுமட்டுமல்ல லியோ படத்தில் டான்ஸ் யூனியனுக்கு 35 லட்சம் வர வேண்டியது. அதுவும் வரவில்லையாம். அதைப்பற்றியும் தினேஷ் மாஸ்டர் ஒன்றும் கேட்கவில்லை .இது ஒரு பெரிய ஸ்கேம். அதற்கும் உடந்தையாக இருந்திருக்கிறார் தினேஷ் மாஸ்டர் என ஒட்டுமொத்தமாக அவர் மீது மற்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கடந்தாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடனம் ஆடியதற்கு நடன இயக்குனர்களுக்கு சேர வேண்டிய சம்பளமும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top