Connect with us

Cinema News

ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது.. தனுஷ் சொன்னது இவங்களதானா?

தனுஷ் நடிப்பில் வரும் இருபதாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் குபேரா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷ் பேசிய பேச்சு ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் கதிகலங்க வைத்தது. அந்த அளவுக்கு ஆவேசமாக பேசி இருந்தார். அவருக்கு எதிராக பல சர்ச்சைகளும் வதந்திகளும் வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் அந்த மேடையை தன்னுடையதாக பயன்படுத்திக் கொண்டார்.

இதில் முக்கியமாக பார்க்கப்பட்ட விஷயம் என்னவென்றால் ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அது யாரை பார்த்து சொன்னார் என்ற விவாதம் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். சமூக ஊடகங்களில் மிகப்பெரிய நெகட்டிவ் பப்ளிசிட்டி நடந்து கொண்டிருக்கின்றது.

தனுஷை பல்வேறு விஷயங்களில் தொடர்பு படுத்தி தனுஷ் மீது ஒரு அவதூறான வன்மமான தாக்குதலை நடத்திக் கொண்டு வருகிறார்கள். இதை நாம் கவனிக்கும்போது நமக்கு புரிந்த விஷயம் என்னவெனில் சிவகார்த்திகேயனுடைய இணைய கூலிப்படைகள் தொடர்ந்து தனுஷ் மீது ஒரு தாக்குதல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் சிம்புவின் ரசிகர்களும் அதே மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உள்ளுக்குள் இவர்களுக்கு இடையேயான நட்பு பற்றி என்ன என்பது யாருக்குமே தெரியாது. வெளியில் வருகிற தகவல்களை வைத்து இவர் இவருடைய எதிரி அவர் அவருடைய எதிரி என இவர்களாகவே முடிவு செய்து கொண்டு இப்படி ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நயன்தாரா தரப்பினர் தனுஷுக்கு எதிராக சில விஷயங்களை செய்து கொண்டு வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது மூன்று தரப்பினர்தான் தனுஷுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என நான் நினைக்கிறேன் என பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top