Categories: Cinema News latest news

இந்தப் பக்கம் ‘ஜெயிலர் 2’.. அந்தப் பக்கம் ‘இட்லிகடை’! நெல்சனுக்கு ஆஃபர் கொடுத்த தனுஷ்

சிம்பு வெற்றிமாறன் இணைந்து உருவாகப் போகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. அதனுடைய முதல் நாள் படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அனைவரும் கவனித்த விஷயம் என்னவெனில் சிம்பு அருகில் நெல்சன் நின்று கொண்டிருந்தது தான். வெற்றிமாறன் சிம்பு படத்தில் நெல்சனுக்கு என்ன வேலை என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருந்தது.

அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தில் நெல்சன் நடிக்கிறாரா இல்லையா அல்லது கேமியோ ரோலில் வருகிறாரா என்ன பல சந்தேகங்கள் அனைவருக்கும் இருந்தன. அதனால் இந்த படத்தில் நெல்சன் ஒரு இயக்குனராகவே நடிக்க இருக்கிறார் என்பதுதான் தற்போது வந்த தகவல். அதனால் நெல்சனுக்கு இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலாக இது இருக்கும் என தெரிகிறது .

இன்னொரு பக்கம் நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார். அதனால் ஜெயிலர் 2படப்பிடிப்பின் போது அவருக்கு எப்பொழுதெல்லாம் ஃப்ரீயாக இருக்கிறாரோ அந்த நேரத்தில் வெற்றிமாறன் படத்தில் வந்து நடித்துவிட்டு போவார் என்று சொன்னதாக தெரிகிறது. ஏற்கனவே இட்லி கடை படத்திலும் தனுஷ் நெல்சனை ஒரு கேரக்டருக்கு அழைத்திருந்தாராம்.

ஆனால் அந்த நேரத்திலும் ஜெயிலர் 2படப்பிடிப்பில் இருந்ததனால் இட்லி கடை படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்பது தெரிகிறது. ஆனால் இப்பொழுது சிம்புவுக்கு மட்டும் எஸ் சொல்லி இருக்கிறார். ஆனால் சினிமாவில் முதன் முதலில் நெல்சனை இயக்குனராக பார்க்க ஆசைப்பட்டது சிம்பு தான். கோலமாவு கோகிலா படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் நெல்சன்.

ஏதோ சில பல பிரச்சனைகள் காரணமாக அந்த படம் டேக் ஆஃப் ஆகாமலேயே போய்விட்டது .இல்லை எனில் நெல்சனை முதன் முதலில் இயக்குனராக அறிமுகப்படுத்தியிருப்பவர் சிம்புவாகத்தான் இருப்பார். அதனால் அந்த நன்றி கடனுக்காக கூட இந்த படத்தில் சிம்புக்காக நெல்சன் ஓகே சொல்லி இருப்பார் என கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கவினும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பதை எல்லாம் பற்றி இனிமேல் தான் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும். இதை முடித்த பிறகு தான் அடுத்த சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் படம் பண்ண போகிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்