தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த படியான ரேஞ்சில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் ஆரம்பகால சினிமாவில் ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டார். இதெல்லாம் ஒரு மூஞ்சி? சினிமாவிற்கு நடிக்க வந்துட்டான் என்றெல்லாம் பல பேர் கூறினார்கள்.
ஆனால் அதையெல்லாம் ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்தாலும் அசுரன் திரைப்படம்தான் இவரை மக்களிடையே ஒரு தவிர்க்க முடியாத நடிகராக நிற்க வைத்தது.
யாருமே அந்தப் படத்தில் தனுஷை அந்த மாதிரியான கேரக்டரில் நினைத்து பார்க்கவில்லை. 30 வயதில் வயதான கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ். அந்தப் படத்திற்கு அவர் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் தனித்துவமாக அமைந்தன.
கர்ணன், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் இவரின் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களாக அமைந்தன. அதில் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் மீது சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதாவது பல தயாரிப்பாளர்களிம் அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டு படம் பண்ணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இனிமேல் தனுஷை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்பையில் ரெட் கார்டை போட்டிருக்கிறது.
இருந்தாலும் இந்த நடவடிக்கையால் ஒரு சில பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் தனுஷ் மீது இந்த நடவடிக்கைக்கு காரணம் ரஜினிதான் என்றும் ஒரு சில செய்திகள் வெளியானது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் கூறும் போது இந்த மாதிரி ஒரு அநாகரீகமான செயலை ரஜினி கண்டிப்பாக செய்ய மாட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சினையில் முதலில் இருவரையும் அழைத்துப் பேசியதே ரஜினிதான். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் சரியான பதிலை கொடுக்கவில்லை. அதனால் ரஜினி ஒதுங்கிவிட்டார். இப்படி இருப்பவரா தனுஷ் மீதான இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருப்பார் என்று வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…