Connect with us

Cinema News

அந்த ரெண்டு பேரும் தூங்க மாட்டானுங்க!.. ராயன் சக்சஸ் பார்ட்டியில் நடந்தது என்ன?..

ராயன் படம் நல்ல வசூலை பெற்று வருவதால் தனுஷ் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ராயன். தனுஷின் 50வது திரைப்படமாக ராயன் வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் தனுஷின் தம்பிகளாக காளிதாஸ் ஜெயராமன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தங்கையாக துஷரா விஜயன் நடித்திருக்கிறார்.

இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைகளை வளர்க்கும் அண்ணனாக தனுஷ் நடித்திருக்கிறார். ஒரு கொலையை செய்துவிட்டு தம்பி, தங்கையுடன் சென்னை வரும் தனுஷ் இரண்டு கேங்ஸ்டர் கும்பலிடம் மாட்டிக்கொண்டு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் மற்ற ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. படம் எப்போது நடக்கிறது? எங்கே நடக்கிறது? என்பதே குழப்பமாக இருக்கிறது. படம் முழுவதும் இரவிலேயே நடக்கிறது. பல காட்சிகளில் இது எப்படி நடந்தது என்பதற்கு காரணங்களே காட்டப்படவில்லை.

பாட்ஷா, அசுரன், ஆடுகளம் என பல படங்களை உல்டா செய்து ஒரு கதையை தனுஷ் எழுதி இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாகம் ஓரளவுக்கு சென்றாலும் இரண்டாம் பாகம் சோதிக்கிறது என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இப்படி எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ராயன் படம் முதல் 3 நாட்களில் இந்திய அளவில் 42 கோடி வசூலும், உலகளவில் 50 முதல் 55 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், முதல் நாளே படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அன்று இரவே அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ்.

இந்த பார்ட்டியில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷரா, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது தனுஷுக்கு நெருக்கமானவர்கள் ‘படம் ஹிட்டு. அந்த 2 பேரும் தூங்க மாட்டானுங்க’ என கமெண்ட் அடித்தார் எனவும் அதைகேட்டு தனுஷ் ரசித்தார் எனவும் செய்திகள் கசிந்துள்ளது. இதையடுத்து அந்த இரண்டு பேர் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்தான் என சொல்கிறார்கள் ரசிகர்கள்.

Continue Reading

More in Cinema News

To Top