தமிழ் சினிமாவில் தற்போது அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த நடிகர் யார் என்றால் அது தனுஷ் தான். அவர் முதன்முதலாக துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆகும் பொழுது அவரைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. படமும் அடல்ட் மாதிரியான கதை. அதனால் அவர் மீது ஒரு தவறான பார்வை இருந்தது. அதற்கேற்ப துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து நடித்த படங்களுமே கதைக்கே முக்கியத்துவம் இல்லாமல் இளைஞர்களுக்கான படமாக தான் இருந்தது.
அதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் அவருக்கு குறைவாகத்தான் இருந்தார்கள். ஆனால் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய வளர்ச்சி அசுர வளர்ச்சியாக மாறியது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பில் ஒரு அபார தன்மையை வெளிப்படுத்தி எனக்குள்ளும் ஒரு நடிகன் இருக்கான்டா என்பதை நிரூபித்து காட்டினார் தனுஷ். அவ்வளவுதான் அந்த படத்திற்கு பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் சினிமாவில் மிக அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தேர்ந்தெடுத்து நடிப்பதைப் போல தொடர்ந்து நடித்து வருகிறார் தனுஷ்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் சிறந்த படைப்பாளி தனுஷ் என்று சொல்ல வைத்து விட்டார் .பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் அடுத்த ராயன் திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கினார். தற்போது இட்லி கடை படத்தையும் இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் நடிகராகவும் தன்னுடைய வேலையை செய்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து தனுஷ் அஜித்தை வைத்து தான் படம் பண்ணப் போகிறார் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வந்தது. அஜித்தும் தனுஷும் சந்தித்து என்ன மாதிரியான கதை என்பதை பற்றி பேசிக் கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் இதுவரை சந்தித்துக் கொள்ளவே இல்லையாம்.
ஒன் லைன் ஸ்கிரிப்ட் மட்டும்தான் சொல்லி இருக்கிறாராம். அதன் பிறகு இருவரும் சந்திக்கலாம் என்று இருக்கும் பொழுது தனுஷ் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று விட்டாராம். அவர் வரும் பொழுது அஜித் அவருடைய ரேசில் பிஸியாகிவிட்டாராம். ரேஸ் முடிந்து அக்டோபர் மாதத்திற்கு பிறகு இருவரும் துபாயில் சந்திக்கப் போவதாக தற்போது செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால் அஜித்தின் அடுத்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் .அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அஜித் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் எப்போது என்பது பற்றி இனிமேல் தான் செய்திகள் வெளியாகும்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…