இயக்குனர் மிஷ்கின்: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் தற்போது நடிகர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகின்றார். தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வந்த மிஷ்கின் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். கடைசியாக பாலா இயக்கத்தில் வெளிவந்த வணங்கான் திரைப்படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது டிராகன் என்கின்ற திரைப்படத்தில் பிரின்சிபல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
டிராகன் ஆடியோ லான்ச்: இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், வி.ஜே. சித்து, ஹர்ஷத், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி நேற்று இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின் சினிமாவில் இருந்து விரைவில் விலக இருப்பதாக கூறியிருக்கின்றார். அந்த நிகழ்ச்சியில் அவரிடம் ஒரு புத்தகத்தை கட்டி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மிஷ்கின் ‘கண்ணு தெரியாத மான்ஸ்டர் சினிமா உலகத்தில் நல்லவர்களிடையேவும் கெட்டவர்களுக்கு இடையேவும் அதிகம் கஷ்டப்பட்டு கொண்டு ஏதோ சமாளித்துக் கொண்டு இருக்கின்றது. விரைவில் அவர் சினிமாவை விட்டு போகப் போகிறார்’ என்று கூறியிருந்தார். மிஷ்கின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
சினிமா விட்டு விலகும் இயக்குனர்கள்: தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆவதற்கு பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் டாப் இயக்குனர்களாக இருக்கும் பலரும் சினிமாவை விட்டு விலக இருப்பதாக கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் நான் ஒரு 10, 15 திரைப்படங்களை இயக்கி விட்டு சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது மற்றொரு இயக்குனரும் அதேபோல் கூறியிருக்கின்றார். அவர் யார் என்றால் இயக்குனர் ஹச் வினோத் தான். நடிகர் விஜய்யின் 69 வது திரைப்படத்தை இயக்கி வரும் ஹச் வினோத் சமீபத்தில் தனது நண்பர்களிடம் தான் விரைவில் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்று கூறியிருக்கின்றாராம்.
தனக்கு இந்த சினிமா வாழ்க்கை போதும் இன்னும் ஒரு இரண்டு படங்களை செய்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி, விவசாயம் செய்யப் போகிறேன் என்று அவரின் நண்பர்களிடம் கூறியதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…