Categories: Cinema News latest news

Thuglife release : தக் லைஃப் ரிலீஸ் டேட் சென்டிமென்டா? கமல் சொன்ன பதில்

மணிரத்னம், சிம்பு, கமல், ஏ.ஆர்.ரகுமான் காம்போவுல முதல் முறையாக வந்துள்ள படம் தக் லைஃப். படத்தில் அபிராமி, திரிஷா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே ஹைப்பாக உள்ளது.

படத்தின் புரொமோஷன் வேலைகள் ஜரூராகப் போய்க் கொண்டு இருக்கிறது. முதலில் பர்ஸ்ட் சிங்கிள் ஜிங்குச்சா ரிலீஸ் ஆனது. அடுத்ததாக படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து செகண்ட் சிங்கிள் சுகர் பேபி வெளியானது.

நாளுக்கு நாள் படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஜூன் 1ம் தேதி துபாயில் படத்திற்கான புரொமோஷன் நடைபெற உள்ளது. இதற்கிடையில் இன்று தக் லைஃப் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் சென்னை சாய்ராம் காலேஜில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் மணிரத்னம், கமல், சிம்பு என்ன பேசப்போகிறார்கள் என ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வரும் ஜூன் 5ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி கமல், திரிஷா, சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் உடன் ஒரு யூடியூப் சேனலுக்காக கேஎஸ்.ரவிகுமார் கலந்துரையாடல் நடத்தினார். அதில் பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டது. தெனாலி படத்தில் கேஎஸ்.ரவிகுமாரை தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ஆக்கியவர் கமல் தானாம். அதுமட்டும் அல்லாமல் அந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமார் சென்டிமென்டாக ஒரு கேள்வியை கமலிடம் எழுப்பினார். அதுபற்றிப் பார்ப்போம்.

‘ஜூன் 2008 தசாவதாரம், 2022 ஜூன் விக்ரம். இப்போ 2025 ஜூன்ல தக் லைஃப். இதுதான் சென்டிமென்ட் இருக்குறதுக்கு சான்ஸ். ஏன் ஆகஸ்டுல ரிலீஸ் பண்ணினா ஓடாதான்னு கேட்பீங்க. இருந்தாலும் எனக்கு தோணுச்சு. இது மிகப்பெரிய வெற்றி அடையணும். தசாவதாரம் மாதிரி 10 மடங்கு வெற்றி அடையணும்.

விக்ரம் மாதிரி பல வழிகளில் விற்கணும். மிகப்பெரிய வெற்றி அடையணும். எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள்’னு சொல்லிக்கிட்டே போனாரு கேஎஸ்.ரவிக்குமார். அதுதான் உங்க வாழ்த்துன்னா நான் எந்த சென்டிமென்ட்னாலும் ஒத்துக்கறேன்னாரு கமல்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v