Categories: Cinema News latest news

அஜித் ரொம்ப சந்தோஷமா இருந்தா இததான் செய்வாரு!.. மகிழ் திருமேனி சொன்ன சீக்ரெட்..!

Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். கார் ரேஸில் மூன்றாவது பரிசையும் வென்று அசத்தியிருந்தார் நடிகர் அஜித்.

விடாமுயற்சி: நடிகர் அஜித்குமார் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் பொங்கல் ரேஸிலிருந்து விலகியது.

இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மகிழ் திருமேனி புரமோஷன்: விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் படத்தில் நடித்திருந்த பிரபலங்கள் பலரும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதிலும் இயக்குனர் மகிழ் திருமேனி கொடுத்து வரும் பேட்டியானது மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. படம் குறித்தும், படத்தில் நடிகர் அஜித் உடன் பணியாற்றியது குறித்தும் அவர் கூறும் விஷயங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: விடாமுயற்சி திரைப்படம் எடுத்து முடிப்பதற்கு காலதாமதமான நிலையில் பல்வேறு வதந்திகள் இப்படம் குறித்து வெளிவந்தது. அதாவது மகிழ் திருமேனிக்கும் அஜித்துக்கும் செட்டாகவில்லை. இருவருக்கும் இடையே மோதல் இருக்கின்றது. இயக்குனருக்கும், லைக்கா நிறுவனத்திற்கும் சண்டை என பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் இவை அனைத்திற்கும் மகிழ் திருமேனி தனது பேட்டி மூலமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தான் கமிட்டான உடனே நடிகர் அஜித் தன்னிடம் ஏகப்பட்ட நெகட்டிவிட்டி வரும் அதற்கு தயாராக இருங்கள் என்று கூறினார். அதேபோல் தான் நடந்தது, ஆரம்பத்தில் எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தாலும் போகப்போக அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

நடிகர் அஜித்தின் சமையல்: சமீபத்திய பேட்டியில் பேசிய மகிழ் திருமேனி நடிகர் அஜித்தின் சமையல் திறமையை பற்றி கூறியிருந்தார். அஜித் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் நேரம் கிடைக்கும் போது அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பார். அவரே சமைத்து அவரின் கையால் உணவை பரிமாறுவார். அப்படித்தான் அஜர்பைஜானில் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் படக்குழுவினருக்கு சமைத்துக் கொடுத்தார்.

அங்கு இருந்த குளிருக்கு ஏற்ற வகையில் காரசாரமாக சமைத்து கொடுப்பார். அது மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அஜித் ரொம்ப சந்தோஷமாக மட்டுமே சமைப்பாராம். விடாமுயற்சி ஷெட்டில் அடிக்கடி சமையல் செய்து கொடுத்திருக்கின்றார். சமையல் செய்யும்போது அவர் மிகவும் சந்தோஷமாக இருப்பார்’ என்று அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

ramya suresh
Published by
ramya suresh