Connect with us

Cinema News

இசையா அது? சல்லித்தனமா இருக்கு.. இளையராஜாவை ரிட்டையர்டு ஆக சொன்ன இயக்குனர்

இளையராஜா இப்போது தமிழ் நாட்டின் பெருமையை லண்டன் வரை கொண்டு சென்றிருக்கிறார். சமீபத்தில்தான் சிம்பொனி இசையை லண்டனில் நடத்தி காட்டி மிகப்பெரிய பெருமையை சேர்த்திருக்கிறார். திரையுலகில் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களையும் அன்புகளையும் கொடுத்தனர். ஸ்டாலின் கூட இளையராஜாவுக்கு தமிழ் நாட்டு அரசு சார்பாக ஒரு விழா எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

இது நிச்சயமாக எடுக்கவேண்டிய ஒரு விழாதான். இந்த சினிமாவிற்காக இளையராஜா பண்ற விஷயம் இருக்கே. அது உலகளவு. 50 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் 2 கே கிட்ஸ்களையும் தன் வசப்படுத்தியிருக்கிறார். ஆனால் இப்போது புதுசு புதுசா வந்த இசையமைப்பாளர்கள் இசைக்கும் இசை கேட்கும் அளவுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. இடையிடையே புரியாத சில வார்த்தைகளை போட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ரங்கராஜ் தயவு செய்து இளையராஜா இந்த மாதிரி இசையமைப்பாளர்களிடம் போட்டி போட வேண்டாம். அவர் பேசாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்லி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர். இவர் என்ன சொன்னார் என்பதை பாருங்க.

இளையராஜா மியூசிக் நிறுத்தினால் கூட நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில் இப்போது வெளியாகும் மியூசிக் எல்லாம் கிராமத்து பாஷையில் சொன்னால் சல்லித் தனமாக இருக்கிறது .ஏனெனில் இப்போது மியூசிக் ப்ரொடக்ஷன் தான் நடந்து கொண்டிருக்கிறது. மியூசிக் கிரியேஷன் இல்லை. இந்த ஃபிலிம் மியூசிக் இப்போது வேறொரு ரூபத்தில் போய்க் கொண்டிருக்கின்றது.

முக்கால்வாசி டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. இதை சொல்லலாமா என தெரியவில்லை. உள்ளபடியே இப்போது உள்ள பிலிம் மியூசிக்கு இளையராஜா சார் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. இப்படி ஒரு சூழ்நிலை வரும் பொழுது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவரை விட மியூசிக்கில் ஜீனியஸ் என யாருமே கிடையாது. அவர் இந்திய அளவில் மிகவும் பாப்புலராக இருந்து இப்பொழுது அகில உலகத்தில் பாப்புலராக கூடிய ஒரு இடத்திற்கு போய்விட்டார் .

உதாரணமாக கிரிக்கெட்டர்ஸ் ரிட்டையர்ட் ஆகிறேன் என சொல்கிறார்கள். இல்லையா. அதைப்போல இவரும் சொன்னால் நல்லது என எனக்கு தோன்றுகிறது. இவருடைய இந்த திறமைக்கு பிலிம் மியூசிக் எல்லாம் லாயக்கே இல்லை. அவர் எங்கேயோ போய்விட்டார். உலக அளவில் போய்விட்டார். அதனால் இந்தியாவின் பெருமையை வெளியே கொண்டு வருவது அவருடைய பொறுப்பு .அவருடைய கடமை. அவரால் மட்டுமே முடியும் என இயக்குனர் ரங்கராஜன் அந்த பேட்டியில் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top