Categories: Cinema News latest news

டிராகன் 100வது நாள் விழா!.. மீண்டும் ஏஜிஎஸ் உடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்!.. அவங்கதான் ஹீரோயினா?..

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியான கோமாளி படம் வெற்றியடைந்த பின்னரும், பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் முன் வரவில்லை. ஆனால், அர்ச்சனா கல்பாத்தி பிரதீப் ரங்கநாதனின் ஃபேஸ் வேல்யூவை நம்பாமல் அவரது திறமையையும் திரைக்கதையையும் நம்பி பணம் போட்டு படம் எடுத்தார்.

அதற்கு நல்ல பலனையும் லவ் டுடே படத்தின் மூலம் அனுபவித்து பெரிய வெற்றியை பார்த்தார். லவ் டுடே வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஏஜிஎஸ் தயாரித்த டிராகன் திரைப்படத்தை வெற்றிகரமாக 100 நாட்கள் தங்களது ஏஜிஎஸ் தியேட்டரிலேயே ஓட்டி இன்று வெற்றி விழாவையும் கொண்டாடியுள்ளனர்.

படத்தில் பணியாற்றிய பலருக்கும் நினைவுப் பரிசுகளை அர்ச்சனா கல்பாத்தி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் என மூவரும் இணைந்து வழங்கி உள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த எல்ஐகே மற்றும் ட்யூட் உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹீரோயின் அந்த படத்திற்கும் அநேகமாக கயாடு லோஹர் தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. விரைவில், அடுத்த படத்தின் பூஜையையும் ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனை வைத்து போட்டு விடும் என தெரிகிறது.

Saranya M
Published by
Saranya M