Connect with us

Cinema News

இதெல்லவா வெற்றி! டிராகன் கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த படக்குழு.. ஆட்டத்த பாருங்க

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்த சினிமாவிற்கு ஒரு இயக்குனர் புதியதாக உள்ளே வந்தார். பார்ப்பதற்கு சிறு பையனாக இவன்லாம் என்ன படத்தை எடுக்கப் போகிறான் என்ற ஒரு தோற்றத்தில் தான் அவருடைய உருவமும் இருந்தது. ஆனால் முதல் படமே ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. அதுதான் கோமாளி திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன்.

அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு இந்த மாதிரி ஒரு கதையை இதுவரை யாரும் தமிழ் சினிமாவில் முயற்சி செய்யவில்லை. வித்தியாசமான கதையாக பார்க்கப்பட்டது. அதோடு அந்த இயக்குனரும் அதாவது பிரதீப் ரங்கநாதனும் மிகவும் பிரபலமானார் .அதைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் அவரே நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே.

அந்தப் படம் ஒரு காமெடி கலந்த திரைப்படமாக மக்கள் மனதை வென்றது. அதுவும் ஒரு வித்தியாசமான கதை. அதையும் இதுவரை யாரும் முயற்சி செய்யவில்லை. இப்படி அடுத்தடுத்து வெற்றி படங்களையே கொடுத்து வந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான அடுத்த திரைப்படம் டிராகன். இந்த படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அஸ்வத் மாரிமுத்து.

இவரும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் .படிப்பு எந்த அளவு முக்கியம் என்பதை இந்த படத்தில் மிக அழகாக சொல்லி இருப்பார். படம் வெளியான 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் மட்டும் எட்டு கோடி என்ற அளவில் வசூலை அள்ளியதாக ஒரு தகவல் இருக்கிறது.

இப்போது 100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இந்த படம் மாறி இருக்கிறது .இதோடு சேர்ந்து வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. தனுஷ் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியும் பெறவில்லை. டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா ,கையாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதுபோக கே எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்றவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது. இதுதான் உண்மையான வெற்றி என்பதைப் போல இவர்களுடைய கொண்டாட்டம் பார்க்கப்படுகிறது. இதில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த விழாவில் சிறிய நடனமும் ஆடியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DG0NMy9SiQn/?igsh=MXJpd2kxNTQ5cjF5MA==

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top