Connect with us

Cinema News

மறந்துட்டாங்க.. அதுதான் என்னுடைய வருத்தமே! ஷாலினி குறித்து பிரபலம் சொன்ன தகவல்

Shalini: குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகியாக மாறியவர்தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தார் ஷாலினி. தமிழில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் தான் அந்தப் படம்.

கண் வரை முடி, பாந்தமான நடிப்பு, அழகிய சிரிப்பு என அந்தப் படத்தில் ஷாலினி மிரட்டினார். அப்போது அவருக்கு வயது முன்றுதானாம். அதிலிருந்து மலையாள பட உலகில் மோஸ்ட் வான்டட் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார் ஷாலினி. அதை போல தமிழிலும் ‘ஓசை’, ‘பிள்ளை நிலா’, ‘விடுதலை’, ‘சிறைப் பறவை’, ‘சங்கர் குரு’, ‘ராஜா சின்ன ரோஜா’, ‘பந்தம்’ போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி அதன் பிறகு சினிமாவிற்கு சின்னதாக ப்ரேக் எடுத்துக் கொண்டு ஒரு ஆரேழு வருடம் படிப்பில் கவனம் செலுத்தினார். மறுபடியும் பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் ரி என்ட்ரி கொடுத்தார். ஆனால் முதலில் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்றுதான் எண்ணியிருக்கிறார். ஆனால் பாசில் சொன்னதற்காக ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடலாம் என்று நினைத்து நடித்தாராம்.

அதே படம் தமிழிலும் உருவாக தமிழிலும் தன்னுடைய ஹீரோயின் என்ட்ரியை கொடுத்தார். அந்த படம் தான் காதலுக்கு மரியாதை. முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தார். பெரும்பாலும் காதல் சார்ந்த படங்களிலேயே நடித்து காதல் இளவரசியாக பார்க்கப்பட்டார் ஷாலினி. இந்த காதல் நிஜத்திலும் நிறைவேற இன்று அஜித்துக்கு ஒரு சிறந்த மனைவியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஷாலினிக்கு பல படங்களில் டப்பிங் கொடுத்தவர் ஸ்ரீஜா ரவி. மலையாளத்தில் நிறம் படத்தில் ஷாலினிக்கு டப்பிங் கொடுத்தாராம் ஸ்ரீஜா ரவி. அந்தப் படம் மாபெரும் ஹிட்டாகியிருக்கிறது. அந்த பட வெற்றிவிழாவிற்கு கூட அஜித் சென்றாராம். ஆனால் அந்த மேடையில் ஷாலினிக்காக டப்பிங் பேசியதை யாருமே கொண்டாடவில்லை. நான் அஜித் ஷாலினியை சொல்லவில்லை. தயாரிப்பு தரப்பில் கூட பாராட்டி பேசவில்லை.

sreeja ravi

sreeja ravi

இது எனக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. இதே போல் ஷாலினியை வைத்து இன்னும் இரண்டு வருத்தங்கள் இருக்கின்றன என ஸ்ரீஜா ரவி ஒரு பேட்டியில் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top