ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரங்கூன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படம் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரித்திருக்கின்றனர்.
படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் 55 கோடி தொகைக்கு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் கூடுதல் தகவல் என்னவெனில் சிவகார்த்திகேயனின் சினிமா கெரியரிலேயே இந்தப் படம்தான் அதிக விலைக்கு விற்ற படமாகவும் அமைந்திருக்கிறது.
படத்தின் ரிலீஸ் தேதியில் ஒரே இழுபறி இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக தீபாவளி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இன்னொரு பக்கம் இதே தீபாவளிக்குத்தான் ஒரு வேளை அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அஜித் இதற்கு முற்றிலும் சம்மதிக்கவே மாட்டார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. ஏனெனில் சிவகார்த்திகேயன் மீது அஜித்துக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருப்பதால் அவர் படத்தோடு விடாமுயற்சியை மோத விடமாட்டார் என்ற ஒரு தகவலும் பரவி வருகின்றது.
இந்த நிலையில் அமரன் திரைப்படம் ஏற்கனவே ராணுவ மேஜர் முகுந்த் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைவதனால் அவர் குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு சன்மானம் கொடுக்க வேண்டும் என கருதிய கமல் ஒரு பெரும் தொகையை எடுத்துக் கொண்டு போனாராம்.
ஆனால் மேஜர் குடும்பம் அதை வாங்க மறுத்ததாம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் கமல் அந்த தொகையை கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. இதில் கமலின் பெருந்தன்மையை நாம் பாராட்டவேண்டும் என கோடம்பாக்கத்தில் உள்ளோர் சிலர் பேசி வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…