Categories: Cinema News latest news

50வது நாளை நெருங்கிய ‘குட் பேட் அக்லி’.. கேக் வெட்டி கொண்டாடிய ஆதிக்

அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆன திரைப்படம் குட் பேட் அக்லி. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் பெற்றிருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த படம் அஜித் கேரியரில் நீண்ட நாளுக்கு பிறகு மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படமாக அமைந்தது தான் சிறப்பு.

இதற்கு முன்பு வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக இருந்ததுதான் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். படத்தில் கதை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பிரேமுக்கு பிரேம் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது தான் ஆதிக்கின் அந்த ஒரு மேஜிக்.

மார்க் ஆண்டனி திரைப்படம் எப்பேர்ப்பட்ட வெற்றியைப் பெற்றதோ எந்த அளவு பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்றதோ அப்படி ஒரு பரபரப்பை குட்பேட்அக்லி திரைப்படம் ஏற்படுத்தியது. இந்த நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 50வது நாளை நெருங்கி இருப்பதால் ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

பெரிய அளவு கேக் வாங்கி திரையரங்கில் ஆதிக் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகிய இருவரையும் அழைத்து படத்தின் 50 வது நாள் வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர் ரசிகர்கள். அந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எந்தளவு வெற்றி சாதனை படைத்தாலும் அதையெல்லாம் தன் தலைக்கு கொண்டு போகாதவர் அஜித்.

ஏன் குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வந்த நேரத்தில் அஜித் தன்னுடைய ஒரே பேஷனான கார் ரேஸ் பற்றித்தான் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்தார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்