சிம்புவை எல்லாரும் வேஸ்ட் பண்றாங்க!.. கௌதம் மேனனே காண்டாயிட்டாரே!..

 

STR Thug life: சின்ன வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. சிலம்பரசன் என்பது இவரின் முழுப்பெயர். லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் கொடுத்து இவரை அறிமுகம் செய்து வைத்தார் அவரின் தந்தை டி.ராஜேந்தர். சிறுவனாக இருக்கும்போதே ஹிட் கொடுத்தார் சிம்பு. அதன்பின் அப்பாவின் மூலம் காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

சின்ன வயதிலிருந்து நடித்து வருவதால் சினிமாவை நன்றாகவே கற்றுக்கொண்டார் சிம்பு, கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை என எல்லாவற்றிலும் சிம்புவுக்கு திறமை உண்டு. பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டார்.


அதேநேரம் படப்பிடிப்புக்கு சரியாக போகாமல் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கோபப்படுத்தினார். சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியாக வரமாட்டார் என்கிற இமேஜ் அவர் மீது உண்டானது. இவர் மீது தயாரிப்பாளர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததும் நடந்தது. 2 வருடங்களுக்கு ஒரு ஹிட் படம் கொடுப்பார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

சில வருடங்களுக்கு பின் மாநாடு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதன்பின் அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் ஓடவில்லை. பத்து தல வெளியாகி 2 வருடங்கள் ஆன நிலையில் இப்போது தக் லைப் படம் வெளியாகியுள்ளது.


மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கமலுக்கு நிகரான வேடம் சிம்புவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிம்புவே அவரின் வேலையை சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், சிம்புவை வைத்து விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை இயக்கியுள்ள கௌதம் மேனன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கதையில் என்ன எழுதினாலும், நாம் என்ன சொன்னாலும் சிம்பு நடிக்கும்போது அழகா ஒன்னு பண்ணுவார். அது ஸ்கீரீன்ல மேஜிக் போல செமையா வரும். ஆனால், கோலிவுட்டில் சிம்புவின் நடிப்பை வேஸ்ட் பண்றாங்க. எனக்கு தெரிஞ்சி அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் ஆகியோர் சிம்புவுக்கு ஹிட் படங்களை கொடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என பேசியிருக்கிறார்.

From Around the web