Cinema News
எனக்காக முதன் முதலா கேரவன் தயாரிச்சி அனுப்புனது அம்மா… கௌதமியின் ஆச்சரிய அனுபவங்கள்
நடிகை கௌதமி தனது சினிமா உலக அனுபவங்கள் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் சில விசேஷமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
எனக்கு கார் பிடிக்கும். டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் பிடிக்கும். விதம் விதமா டிரைவ் பண்ணிருக்கேன். எனக்கு முதல்ல கேரவன் தயாரிச்சி சூட்டிங் அனுப்புனது அம்மாதான். அந்தக் காலத்துல எனக்கு அவ்ளோ படங்கள் இருந்தது. சென்னையில இருந்ததால தினமும் 2ல இருந்து 6 மணி நேரம் ஒர்க் பண்ணுவேன்.
2 தமிழ்ப்படங்கள். முதல் பாதி இங்கே. அடுத்து அங்கேன்னு சூட்டிங் போவேன். அவுட்டோர் சூட்டிங் போவேன். நான் பண்ணின பல படங்கள் வில்லேஜ் பேக்ரவுண்டு. வெவ்வேறு பேக்ரவுண்டுல இருக்கும். ஒரு மாசத்துல 3 அல்லது 4 நாள் வீட்ல இருக்குறதே பெரிய விஷயம்.
இவ்ளோ நாளா வெளியில சுத்திக்கிட்டு இருக்கும்போது நமக்குன்னு வசதியா ஒரு இடம் வேணும். ரெஸ்ட் எடுக்குறதுக்கு, டிரஸ் மாத்துறதுக்கு, டிராவல் பண்றதுக்குன்னு வேணும்னு அம்மா தான் பர்ஸ்ட் கேரவன கிரியேட் பண்ணினாங்க.
அப்போ கேரவன் கல்ச்சர் இல்லாத நேரம். மத்தவங்க பார்வையில அது புதுசா இருக்கும்னு எல்லாம் நான் யோசிக்கல. என்னோட டெம்போ வேனை நானே ஓட்டிக்குவேன். என்னோட செயல்களால யார் இம்பரஸா ஆவாங்கன்னு நான் பார்க்கல. எனக்கு இது சரியான முடிவா இருக்கு.

அவ்ளோதான் என்னோட மைன்ட்ல இருக்கும். அது தவிர இப்படி பண்ணினா யார் பார்ப்பாங்க? யார் பொறாமைப்படுறாங்க? யார் பாராட்டுறாங்க? இதெல்லாம் எனக்குப் பார்க்கத் தோணாது என்கிறார் நடிகை கௌதமி. அது மட்டும் அல்லாமல் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்து என்னைக்குமே நான் பயந்தது இல்லை.
அவங்க ஒரு பாசத்தோடு தான் வருவாங்க. குருசிஷ்யன் படத்துல நடிக்கும்போது ரஜினி சார் எனக்கு அவ்ளோ பாதுகாப்பு கொடுத்தாங்க. அதனாலதான் அடுத்தடுத்து படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன் என்றும் கௌதமி அதே பேட்டியில் தெரிவித்துள்ளார்.