Connect with us

Cinema News

20 படத்துக்கு பணம் வாங்கல.. விலையுயர்த்த பட்டுச்சேலைகள்! இளையராஜாவின் இன்னொரு முகம்

சினிமாவில் கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மெட்டு அமைத்து 1400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்து இருக்கிறார் இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி இப்போது ரிலீசான விடுதலை 2 படம் வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த சினிமாவில் பயணம் செய்து வருகிறார். பல தலைமுறைகளை கண்டவர். இவர் இசையமைக்கும் பொழுது இவருடன் அந்தப் படத்தின் இயக்குனர் மட்டுமே இருப்பார்.

பாடலுக்கான சூழல் கதைகளை கேட்ட பிறகு இயக்குனரை வெளியே அனுப்பிவிட்டு அதன் பிறகு அவருடைய ஹார்மோனியம் மட்டும் தான் அவருடன் இருக்கும். இப்படித்தான் இவருடைய இசையும் உருவாகும். இளையராஜா மீது கடுமையான விமர்சனங்கள் எழும் போதும் அதை பற்றி என்றைக்கும் அவர் கண்டுகொள்ளதே இல்லை. இவ்ளோ பணம் சம்பாதிக்கிறார். யாருக்கும் எந்த உதவியும் பண்ணும் எண்ணம் அவருக்கு வந்ததே இல்லை என அவரை பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

பணம் மட்டும்தான் முக்கியம் என்றெல்லாம் இளையராஜாவை பற்றி கூறி வருகிறார்கள். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவர் பல பேருக்கு யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்து வருகிறார் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் அன்னக்கிளி பட இயக்குனர் செல்வராஜ் இளையராஜாவை பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

annakili

annakili

செல்வராஜ் பல படங்களை இயக்கியிருக்கிறார். அதில் பெரும்பாலும் இளையராஜாதான் இசையமைத்து கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் அவர் பணமே வாங்கவில்லையாம். அதுமட்டுமில்லாமல் செல்வராஜின் மகள் திருமணத்திற்காக விலையுயர்ந்த பட்டுச்சேலைகளை வாங்கி கொடுத்திருக்கிறாராம். ஒவ்வொரு பட்டுச்சேலையும் 80000 விலை இருக்கும். அவர்தான் வாங்கிக் கொடுத்தார் என செல்வராஜ் கூறினார்.

லண்டனில் சிம்பொனி இசையை நடத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார் இளையராஜா. சமீபத்தில்தான் அவர் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது லண்டனில் நடத்திய சிம்பொனி இசையை இங்கு நம் நாட்டு மக்களுக்கும் கேட்குவகையில் ரி கிரியேட் செய்து கொடுக்க போகிறேன். அவர்களும் கேட்கவேண்டும் என ஆகஸ்ட் 2 ஆம் தேதி அந்த இசையை நடத்த போவதாக இளையராஜா கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top