Categories: Cinema News latest news

பிறந்தநாளில் மக்களுக்கு சர்ப்ரைஸ் செய்தி சொன்ன இளையராஜா.. அட இது வேறலெவல்

இசைஞானி இளையராஜா தன்னுடைய 82 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களை சொல்ல ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புகைப்படம் எடுத்தவாறு இருக்கின்றனர். அதற்கு முன்னதாக தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இளையராஜா கடந்த ஆண்டு தன் மகள் பவதாரணி புற்றுநோயால் இறந்ததால் பிறந்த நாளை கொண்டாடவில்லை.

அதனால் இந்த வருடம் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய உண்மையான பிறந்த தேதி ஜூன் மூன்றாம் தேதி. ஆனால் ஜூன் 3 கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் தனது பிறந்த நாளை இரண்டாம் தேதி ஆக மாற்றி அதை இன்று வரை பின்பற்றி கொண்டாடி வருகிறார் இளையராஜா. திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் ரசிகர்கள் என தொடர்ந்து இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட பல அமைச்சர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளின் போது மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆன செய்தியை கூறியிருக்கிறார் இளையராஜா.

கடந்த வருடம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்தி காட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தார் இளையராஜா. அது உலகெங்கிலும் பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் அந்த சிம்பொனி இசையை தன் நாட்டு மக்களும் கேட்க வேண்டும் அதைக் கேட்டு அவர்கள் மேம்படைய வேண்டும் என இளையராஜா ஆசைப்படுகிறார். அதனால் லண்டன் ஆர்கெஸ்ட்ராவை இங்கே வரவழைத்து அதே சிம்பொனி இசையை தமிழில் ரீ கிரியேட் செய்து கொடுக்க இருக்கிறாராம்.

ilaiyaraja

ஆகஸ்ட் இரண்டாம் தேதி தனது ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து அதே சிம்பொனியை இங்கே தன்னுடைய ரசிகர்களுக்காக பண்ண இருக்கிறார் இளையராஜா. இதை கேட்டு நீங்கள் உற்சாகமடைய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்