மணிரத்னம் படங்கள் என்றாலே பாடல்கள் பிரமாதமாக இருக்கும். தற்போது தக்லைஃப் படத்தில் பணியாற்றி வருகிறார். கமல், சிம்பு இந்தப் படத்தில் நடித்து இருப்பது எதிர்பார்க்க வைக்கிறது. படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் ஜிங்குச்சா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மணிரத்னம் இசை அமைப்பாளர்களிடம் இசையை எப்படி வாங்குவார்? அவருக்கு சுதந்திரம் கொடுப்பாரா இல்லை பிடிவாதம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. வாங்க இதற்கான பதிலைப் பார்ப்போம்.
பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராமை வானம் கொட்டட்டும் என்ற படத்தில் பிரபல இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம். அவரைப் பொருத்தவரை தனக்கு திருப்தியாக வரும்வரை ஒருவரை விட்டுற மாட்டாரு.
உங்ககிட்டேயும் அப்படி வேலை வாங்கி இருக்காரான்னு சித் ஸ்ரீராமைப் பார்த்து நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். மணிரத்னம் மட்டும் இல்ல. எல்லா இயக்குனர்களும் அப்படித்தான். ஆனாலும் அந்தப் பாடலில் நமக்கு எப்பேர்ப்பட்ட சுதந்திரம் இருக்குங்கறதைத்தான் பார்க்கணும். சிறந்த இசையை எங்கிட்ட இருந்து வாங்கணும்னு மணிரத்னமும், அந்தப் படத்தின் இயக்குனரான தனசேகரும் ரொம்ப மெனக்கிட்டாங்க.
ஆனா அதைத்தாண்டி எனக்கு சுதந்திரமும் கொடுத்தாங்க. அப்படி கொடுக்கலன்னா வானம் கொட்டட்டும் படத்தில் நல்லதொரு இசையை என்னால தந்திருக்க முடியாது என்றார் சித் ஸ்ரீராம். ஏதாவது ஒரு பாடலை ரீமிக்ஸ் பண்ணனும்னா எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பீங்கன்னு சித்ஸ்ரீராமிடம் அந்த நிருபர் கேட்டார்.
என்னைப் பொருத்தவரைக்கும் ரீமிக்ஸ் பாடல்ல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல பழைய திரைப்படப் பாடலைப் பாடும் வாய்ப்பு எனக்கு ஒரு மேடையில அமைஞ்சதுன்னா கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் பாட ஆசைப்படுகிறேன் என்றார்.
2020ல் மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் வெளியான படம் வானம் கொட்டட்டும். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியவர் மணிரத்னம். இயக்கியவர் தனா, இசை அமைப்பாளர் சித் ஸ்ரீராம். பாடல்கள் அருமை. ஆனால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…