Categories: Cinema News latest news

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அஜித்தா? ஆர்வத்தில் சந்தோஷ் நாராயணன் சொன்னத கேளுங்க

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முன் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எந்த அளவு அஜித் ரசிகர்களை ஏமாற்றியதோ அதற்கு இரு மடங்காக குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படமாகவே அது அமைந்தது தான் சிறப்பு.

ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர் என்பதாலும் அஜித் மீது தீவிர அன்பு கொண்டவர் என்பதாலும் இந்த படத்தில் அஜித்தை அணு அணுவாக ரசித்து நடிக்க வைத்து படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறார் .கூடவே ஜீவி பிரகாஷ் இசை கூடுதல் பலமாக இருந்தது. இந்த படத்தை முடித்த கையோடு அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ள சென்று விட்டார். இப்போது உலகெங்கிலும் நடைபெறும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார் அஜித்.

அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர் .இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றன.

இதைப் பற்றி சந்தோஷ் நாராயணனிடம் அஜித் கார்த்திக் சுப்பாராஜ் இணைவதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அப்படி இருந்தால் நீங்களும் அதில் இருப்பீர்களா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு சந்தோஷ் நாராயணன் கண்டிப்பாக அப்படி நடந்தால் முதல் ஆளாக துண்ட போட்டு நான் போய் உட்கார்ந்து விடுவேன். ஒரு ஃபேன் பாயாக அந்த படத்தில் என்னுடைய பங்கும் இருக்கும். ஆனால் கதைக்கு ஏற்ப அவர்கள் யாரை அணுகுகிறார்களோ அப்படித்தானே அமையும் என சந்தோஷ நாராயணன் பதில் அளித்து இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்