Connect with us

Cinema News

இளையராஜா வீட்டுக்கு மருமகளா வனிதா? கங்கை அமரன் என்ன சொல்றாரு?

மிஸஸ் அண்டு மிஸ்டர் என்ற படத்தில் வனிதா நடித்துள்ளார். தயாரிப்பு, இயக்கம் என அனைத்துமே இவர்தான். இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தின் கதை என்னன்னா 45 வயசைத் தாண்டிய ஒரு கணவன் இனி நமக்குக் குழந்தை தேவையில்லை. அதை வளர்த்து ஆளாக்குறது சிரமம்னு நினைக்கிறான். ஆனால் மனைவி குழந்தை வேணும்னு சொல்கிறாள்.

இதற்காக கணவனை தாம்பத்ய உறவுக்கு அழைக்கிறாள். அதுதான் கதை. இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வந்த சிவராத்திரி தூக்கமேது பாடலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக இளையராஜா நோட்டீஸ் விட்டுள்ளார்.

இந்த மாதிரி ஒரு படத்துக்கு இளையராஜா நோட்டீஸ் விடலாமா? அதன்மூலம் படத்திற்குத் தானே விளம்பரம்… இதெல்லாம் தேவையா? கார்த்திக் சார் இளையராஜாவின் சின்ன வடிவம்தான். அவருக்கு பெண்களுடன் பேசுவதே பிடிக்காது. அவரு வனிதாவைத் தான் கல்யாணம் முடிப்பேன்னு எதுவும் அறிக்கையே விடலையே.

அப்புறம் வனிதா ஏன் அப்படி சொல்றாங்க? இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவளாம். எனக்கு இந்த பாடலைப் பயன்படுத்தக்கூடிய உரிமை கூட இல்லையான்னு கேட்டு கதறி அழுகிறாள். சினிமாவில் இளையராஜா மீது உரிமை எடுத்துட்டுப் போறது ஒரு உணர்வுப்பூர்வமான பழக்கம். அதை இப்போது வெளியே சொன்னா அது நாகரிகம் கிடையாது.

கங்கை அமரன் சார் சொல்லி வருத்தப்பட்டாரு என்கிறார். வனிதா பேசும்போது இளையராஜா ஒரு லெஜண்ட். மியூசிக்குக்கு கடவுள் மாதிரி. கடவுளே நம்மைக் கோவிச்சிக்கிட்டா எப்படி இருக்கும். அந்த வீட்டுல அவ்ளோ தூரம்நான் அந்த வீட்டுக்கு உழைச்சிருக்கேன்.

அந்த வீட்டுக்கு நான் மருமகளா போக வேண்டியது. அவ்ளோதான் சொல்ல முடியும்னு கதறி அழுகிற ஒரு வீடியோ வைரலாகிறது. இதுதான் இவ்ளோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்கண்ட தகவலை பிரபல சினிமா மூத்த பத்திரிகையாளர் தேனி கண்ணன் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top