Categories: Cinema News latest news

ஜெயிலர் 2வில் இணையும் பிக் பிரபலம்? அப்படின்னா 1000 கோடி உறுதி!

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை அனிருத். படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. படத்தில் கேமியோவாக மோகன்லால், நந்தமூரி பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்போது படத்தைப் பற்றியும் அதில் இணையும் பெரிய பிரபலம் குறித்தும் ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. என்னன்னு பாருங்க.

ஜெயிலர் 1ல இருக்குறதுல பாதி பேர் இருக்காங்க. பாலையா, பகத்பாசில், சிவராஜ்குமார் இணைஞ்சிருக்காங்க. இந்தியில இருந்து யாரை எடுக்குறதுன்னு விசாரிக்கும்போது ஷாருக்கானின் பேரு அடிபட்டுருக்கு. ஏற்கனவே ஷாருக்கான் தமிழ் சினிமா உலகில் ரஜினியுடன் நடிக்க விருப்பம் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

அதனால் ஷாருக்கான் இணையலாம் என தெரிகிறது. அது இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக வரவில்லை. அவர் 10 நாள் நடிச்சா போதும். நெல்சன் தரமா பண்ணிடுவாரு. ஷாருக்கானுக்காக சூப்பர்ஸ்டார் ஒரு கேமியோ ரோல் பண்ணிருக்காரு. அது என் இங்கே நடக்கக்கூடாது? இப்ப உள்ள நடிகர்கள் கூட நடிக்கணும்னா ஷாருக்கான் தயங்கலாம்.

ரஜினி சார் படம்னாலே அவரும் எதுவும் பேசமாட்டாரு. வந்துடுவேன்னு சொல்லிடுவாரு. ஆனா இது கண்டிப்பா நடக்கும்னு சொல்றாங்க. கூலி 1000 கோடி அடிக்கும்னு உறுதியாகப் பலரும் சொல்றாங்க. ஜெயிலர் 2 என எல்லாமே தரமான சம்பவமாகத் தான் இருக்கும். இதுக்காக சன் பிக்சர்ஸ் பக்காவா ஸ்கெட்ச் போடுவாங்க.

அதனால ஜெயிலர் 2 படமும் பிரமாதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இப்படி பெரிய பெரிய ஸ்டார்கள் நடிக்கும்போது அவர்களுக்கான ரசிகர்களும் படம் பார்க்க வருவாங்க. அதனால கலெக்ஷனும் அதிரிபுதிரியாக இருக்கும் என்று தெரிகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v