Jailer 2: சினிமா ஷூட்டீங் எடுப்பது என்பது முன்பு போல் இல்லை. இப்போதெல்லாம் எல்லோரின் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டதால் எல்லாவற்றையும் செல்போனில் வீடியோவாக எடுத்து டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுகிறார்கள். இதனால், பல லட்சம் பேர் அதை பார்த்து விடுகிறார்கள்.
அவுட்டோர் என சொல்லப்படும் வெளிப்புற படப்பிடிப்பு நடக்கும்போதுதான் இப்படி என்றால் ஸ்டுடியோவுக்குள் படப்பிடிப்பு நடந்தாலும் யாராவது செல்போனில் எடுத்து பகிர்ந்து விடுகிறார்கள். இப்போதுவரை இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ரஜினி, விஜய் ஆகியோரின் புதிய படங்களின் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளும் இப்படி ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் கூலி. இந்த படத்தின் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது ஒருவர் செல்போனில் எடுத்து வெளியே பகிர்ந்துவிட்டார். அதேபோல், சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வரும் படம் பராசக்தி.
1964ம் வருடம் தமிழகத்தில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி ஆகிய மூவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
இன்றைக்கு கூட இலங்கையில் நடக்கும் படப்பிடிப்பு தொடர்பான வீடியோ லீக் ஆனது. இப்படி தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் லீக் ஆகி வருவதால் ஜெயிலர் 2 படப்பிடிப்பு குழு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. படத்தில் வேலை செய்யும் எல்லோரும் உள்ளே வரும்போது செல்போனை கொடுத்துவிட வேண்டும்.
உணவு இடைவெளியில் செல்போனை கொடுத்துவிட்டு திரும்ப வாங்கிக்கொள்கிறார்கள்.அதன்பின் மாலை ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போதுதான் செல்போனை கொடுக்கிறார்களாம். இதனால், படப்பிடிப்பு காட்சிகள் லீக் ஆகாது என நம்புகிறார்கள். ஷங்கர் இயக்கும் படங்களின் ஷூட்டிங் நடக்கும்போது இதையேதான் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…