Connect with us

Cinema News

JanaNayagan: ஜனநாயகன் படத்தின் சேட்டிலைட்டில் மட்டும் இத்தனை கோடியா? பெத்த ப்ளான் போட்ட நிறுவனம்

Jananayagan: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி இருக்கும் ஜனநாயகன் சேட்டிலைட் உரிமை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் கேரியர் கடந்த சில வருடங்களாகவே வளர்ச்சியில் இருக்கிறது. கடந்த நான்கு, ஐந்து படங்களாகவே ஒவ்வொரு படத்தை விட இன்னொரு படத்துக்கு சம்பளம் 50 கோடி வரை அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.

அவர் தான் இனி அடுத்த சூப்பர்ஸ்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் இனி அரசியலில் ஆர்வம் காட்ட இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவேன் எனவும் அறிவித்தார்.

அதனால் கோட் திரைப்படத்தினை தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே பெரிய அளவிலான கவலையில் இருக்கின்றனர்.

ஒவ்வொரு நிகழ்வுக்கு கடைசி என்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி தீர்க்க வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். அந்த வகையில் வரும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு எதுவும் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இன்னொரு அறிவிப்பும் வந்துள்ளது.

அதன்படி ஜனநாயகன் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி 51 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெரிய தொகை என்பதால் விஜய் ரசிகர்கள் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Continue Reading

More in Cinema News

To Top