தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர். அதிலிருந்து தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். ஆனால் அந்தப் பெயரை சமீபத்தில் தான் ரவி மோகன் என மாற்றம் செய்திருக்கிறார். முதல் படத்திலிருந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ஜெயம் ரவி மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்த நடிகராக விளங்கினார்.
ஒரு சார்மிங் ஹீரோவாக லவ்வர் பாயாக பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராகவும் மாறினார். தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த ஜெயம் ரவிக்கு இடையில் பல படங்கள் சரிவுகளை தந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் இவருக்கு கை கொடுத்தது. அதுவும் ஃபேன் இந்தியா திரைப்படமாக மல்டி ஸ்டார் நடித்த திரைப்படமாக இருந்ததனால் இது ஜெயம் ரவியின் வெற்றி மட்டும் கிடையாது.
ஒட்டுமொத்த நடிகர்களின் வெற்றியாக கருதப்படுகிறது. சோலோவாக இவர் வெற்றியை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. ஹீரோவாக நடித்து தோல்விகளை சந்திப்பதை விட வில்லனாக நடித்து மாஸ் காட்டி விடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் இறங்கி இருக்கிறார்.
இதற்கிடையில் இவருடைய விவாகரத்து பிரச்சனையும் பல சர்ச்சைகளை உருவாக்கியது. தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றம் வரை சென்று இருக்கிறார் ஜெயம் ரவி .அதற்கான வழக்கு இப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயம் படம் தான் இவருடைய முதல் படம் என்று சொல்லிவிட முடியாது. ஆறு வயதிலேயே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என அவருடைய தந்தை எடிட்டர் மோகன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
1980 இல் இவருடைய தந்தை தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஒரு தொட்டில் சபதம். இந்த படத்தில் ராம்கி ஹீரோவாக நடித்திருப்பார். இதில் சிறு வயது ராம்கி கதாபாத்திரத்திற்கு ஒரு பையன் தேவைப்படுகிறது என சொன்னதும் மும்பையில் இருந்து ஒரு சிறுவனை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு காட்சியில் பல சிறுவர்கள் விளையாடுவது மாதிரியான காட்சியை எடுக்க வேண்டியது இருந்ததாம்.
அப்போது மோகன் ‘சரி இதில் ரவியை நடிக்க வைப்போம்’ என அவரை அழைத்து வந்து நடிக்க வைத்தாராம் .நான் இருந்தால் அவன் வசனம் பேச மாட்டான் என மோகன் போய்விட்டாராம். வந்து பார்த்தபோது ஒரே டேக்கில் நான்கு வரிகள் கொண்ட வசனத்தை நன்றாக பேசி முடித்து விட்டாராம் ரவி. அதை அறிந்ததும் அவருடைய தந்தை மோகனுக்கு ஆச்சரியமாக இருந்ததாம்.
அதன் பிறகு தனியாக ஒரு ரூமுக்கு சென்று தன் கன்னத்தில் அவரே அறைந்து கொண்டாராம். இதற்கு ராம்கியின் சிறுவயது கேரக்டருக்கு ரவியையே நடிக்க வைத்திருக்கலாமே என மிகவும் வேதனை அடைந்தாராம். அதன் பிறகு 12 வயதில் ஒரு தெலுங்கு படத்தில் சுமனுக்கு இள வயது கேரக்டரில் நடித்தாராம் ரவி.அந்த படம் ரவிக்கு ஒரு பெரிய பேரை பேற்றுக் கொடுத்தது என ஒரு பேட்டியில் அவருடைய தந்தை கூறி இருக்கிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…