Connect with us

Cinema News

எனக்கு தெரிந்த ஸ்ரீகாந்த் அப்படிப்பட்டவர் இல்லை!.. இதுல ஏதோ உள்குத்து இருக்கு!.. பிரபலம் ஓபன் டாக்!..

நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டது திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல காலமாக போதைப்பொருள் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது என்றும் மற்ற மொழி சினிமா துறையிலும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த் மென்மையான குணம் கொண்டவர் அவரைப்பற்றி இதுவரை எந்த கிசுகிசு செய்திகளும் கூட வந்தது இல்லை, தனக்கு தெரிந்த வரை எந்த தகாத சகவாசத்திலும் இருந்ததாக தெரியவில்லை, அவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்ததாக கூறியிருந்தார்.

மேலும், ஸ்ரீகாந்த் தனக்கு தயாரிப்பாளர் பிரசாத் பணம் தரவேண்டியதாக இருந்ததாகவும் அதை கேட்கும் போதெல்லாம் போதைப் பொருள் கொடுத்து தன்னை பழக்கிவிட்டதாகவும் கூறுவது நம்பும் படி இல்லை, அப்படி அது உண்மையாக இருந்தால் அவர் கண்டிப்பாக தண்டணை அனுபவிக்க வேண்டும் என்றார். மேலும், நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் மற்றும் சில பிரபலங்களின் பெயரும் அடிப்பட்டாலும் தகுந்த ஆதாரத்துடன் இருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த உட்பட பலருக்கும் இந்த போதைப் பொருளின் பழக்கம் பல நாட்களாக இருந்தாலும் தற்போது அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அதிமுகவின் உறுப்பினர் பிரசாதிற்கு விரிக்கப்பட்ட வலையில் ஸ்ரீகாந்த சிக்கியது மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் சிக்க வாய்ப்புகள் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகாவிற்கு நெருக்கடி கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றார்.

பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு இரண்டு வகையான வாழ்க்கை இருக்கும் ஒன்று வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அல்லது வாய்ப்பே இல்லாமல் இருக்கும் இவை இரண்டையும் சமமாக கருதி வாழ்க்கையை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டுப் போகும் மனப்பான்மை அவர்களுக்கு இல்லை. வாய்ப்பு இல்லாத சமயத்தில் போதைக்கு அடிமையாகி சினிமாவிலும் முன்னேறுவது இல்லை வாழ்க்கையிலும் முன்னேறுவது இல்லை.

மேலும், ஜீவா, சக்தி போன்ற நடிகர்கள் கூட போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருந்தனர். குடிச்சிட்டு வண்டி ஓட்டினால் போலீஸ் கண்டுபிடித்துவிடுவதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக போதை பொருள்களை பயன்படுத்துகின்றனர். அதனால் பல சினிமாக்காரர்கள் அதற்கு அடிமையாகின்றனர்.

சமீப காலமாக நைட் பார்ட்டிக்கு 45 லட்சம் இப்போ இந்த போதை வழக்கு என சினிமா துறையில் தொடர்ந்து வெளிவரும் செய்திகள் மக்கள் மனதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது, ஏன் என்றால் மக்கள் என்னதான் பால் அபிசேகம் செய்து, கட்டவுட் வச்சு நடிகர்களை கொண்டாடினாலும் பேசும் போது அவர்களை அவன் இவன் என்று தான் பேசுவார்கள் அதனால் பெரும் மாற்றம் இருக்காது.

நல்ல ஆச்சாரமான குடும்பத்திலிருந்து இருந்து வந்த ஸ்ரீகாந்த், நான் பழகிப்பார்த்த அளவில் இப்படி பட்டவர் கிடையாது என உருக்கமாக பேசியுள்ளார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top