Connect with us

Cinema News

வாயை மூடினால் வெற்றி நிச்சயம்!.. சூர்யாவின் ‘கருப்பு’ படம் குறித்து பிரபலம் இப்படி சொல்லிட்டாரே!..

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45வது படத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி ‘கருப்பு’ என பெரிடப்பட்டு போஸ்டருடன் வெளியிட்டனர். மேலும், ஆர்.ஜே.பாலாஜி அடுத்த மாதம் ஒரு பெரிய விருந்து வைக்கப்போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தை குறித்து பிஸ்மி பேசியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் மற்றும் மூக்குத்தி அம்மன் என இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் முந்தைய படங்களைப் போலவே, இப்படமும் ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுடன் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் நட்டி நடராஜ், யோகி பாபு, ஸ்வாஸிகா, இந்திரன்ஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில், சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி விருந்து வைக்கப்போவதாக குறிப்பிட்டதற்கு சிலர் அவர் படம் நல்லதான் இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்கின்றனர், சிலர் ஓவர் கான்ஃபிடன்ஸ் நல்லதுக்கு இல்லை என்கின்றனர் என கலவையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். சூர்யாவின் கங்குவா படத்தின் ப்ரோமோஷனில் அதைப்பற்றி பேசி பேசி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர். ஆனால், அப்படத்தில் ஸ்டஃப் இல்லாததால் தோல்வியுற்றது. கருப்பு படத்தில் நல்ல ஸ்டஃப் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் பேசுவதை குறைத்து விட்டால் படம் ஓட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும் கருப்பு படத்தின் டீஸர் சூர்யாவின் 50-வது பிறந்தநாளான ஜூலை 23, 2025 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top