தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது அவர் தன்னுடைய ஒரே ஃபேஷனான கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அக்டோபர் மாதம் வரை தனது முழு கவனத்தையும் ரேஸில்தான் செலுத்த இருக்கிறார் அஜித். அதன் பிறகு தான் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டர் வெற்றியும் அடைந்தது. இந்தப் படத்திற்கு முன்பு வரை அஜித் தன்னுடைய படங்களின் பெயர்களை தமிழிலேயே வைத்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியிலும் சரி திரை பிரபலங்கள் மத்தியிலும் சரி அஜித் மீது ஒரு பெரிய மரியாதையை கொடுத்தது.
இந்த நிலையில் குயிலி என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் படத்திற்கு தமிழ் பெயர் கொடுப்பதற்கான முக்கியத்துவத்தை பற்றி பேசி இருந்தார். ஒரு காலத்தில் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்து வந்த நிலையில் கருணாநிதி இனிமேல் தமிழ் பெயர்களில் வெளியாகும் படங்களுக்கு மானியம் கிடைக்க ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதிலிருந்து தமிழிலேயே படங்களின் பெயர்கள் வெளியாகின. அதில் அஜித்தும் தன்னுடைய படங்களின் பெயரை தமிழிலேயே கொண்டு வந்தார். ஆனால் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி. அது என்ன பெயர்? அந்த ஹீரோயின் வேணும் என்று மட்டும் சொல்ல தெரிகிறது. இது அவருக்கு சொல்ல தெரியலையா .இங்கிலீஷில் டைட்டில் வைக்காதீங்க என சொல்ல வேண்டியது தானே.
இன்னொரு ஹீரோ இப்போது பொதுநலத்திற்கு வருகிறார். அவருடைய படங்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் தான் வந்தன. சர்க்கார் என்று சொன்னார். ஏன் அதற்கு தமிழ் பெயர் இல்லையா. இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வந்துவிட்டார். சரி அரசியல் இப்போது வேண்டாம். அதனால் இனிமேல் தமிழிலேயே பெயர்களை வைக்க முன்வர வேண்டும் என தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார் கே ராஜன்.
TVK VIJAY…
Dhanush: இட்லி…
Vijay: கரூர்…
Kaur: கடந்த…
Vijay TVK:…