Categories: Cinema News latest news

கமலை முழுசா நம்பிய ஜெய்சங்கர்! அவருக்கே அது ஆப்பா முடிஞ்சுடுச்சு..

கமல் எந்த ஒரு விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் அந்த விஷயம் உருப்படாமலேயே போய்விடும் என பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்படும் தயாரிப்பாளர் கே ராஜன். ஒவ்வொரு பட விழாவின் போதும் தயாரிப்பாளர்களுக்காக எப்போதுமே குரல் கொடுப்பவர்.

அதே நேரம் பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசுபவர். அவருடைய இந்த பேச்சுக்காகவே அனைவரும் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு பெரிய நடிகர் என்று கூட பார்க்காமல் அனைவரையுமே பாரபட்சமில்லாமல் கடுமையாக விமர்சிப்பார் கே ராஜன். அந்த வகையில் ஜெய்சங்கர் விஷயத்தில் கமல் செய்த ஒரு பெரிய தவறு என்ன என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஜெய்சங்கர் வண்டிக்காரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது மிகவும் பீக்கில் இருந்தார் ஜெய்சங்கர். அந்த நேரத்தில்தான் வண்ணாரப்பேட்டையில் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியை நான் ஆரம்பித்திருந்தேன். அந்த பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஜெய்சங்கரை அழைத்தேன். அதன் பிறகு பள்ளிக்கூடம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

அதை பார்த்த ஜெய்சங்கர் தனக்கும் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட வேண்டும் என ஆசைப்பட்டு என்னிடம் வந்து கேட்டார். வளசரவாக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டலாம் என முடிவு செய்திருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். ஆரம்பத்தில் எல்கேஜி யுகேஜி முதல் வகுப்பு இதை மட்டும் ஆரம்பியுங்கள். போகப் போக மீதி கட்டிடத்தை கட்டிவிடலாம் என்று ஐடியா கொடுத்தேன். அதேபோல ஜெய்சங்கரும் செய்தார்.

அந்த பள்ளி திறப்பு விழாவிற்கு கமலை அழைக்கலாம் என்ற ஒரு முடிவை ஜெய்சங்கர் என்னிடம் வந்து கூறினார். அப்போது நான் வேண்டாம் என சொன்னேன். இந்த விஷயத்திற்கு எல்லாம் ஏன் கமல் என கேட்டேன் .அதற்கு ஜெய்சங்கர் என்னுடைய நல்ல நண்பர் .அதனால் தான் எனக் கூறினார். அவர் சொன்னதை போல கமல்தான் அந்த பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார் .

krajan

அவர் திறந்து சரியாக இரண்டு வருடத்தில் அந்த பள்ளியையே மூட வேண்டிய நிலைமையை ஆகிவிட்டது .அதனால் தான் சொல்கிறேன் கமல் எந்த விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தாலோ அல்லது ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலோ அது வந்து நல்லபடியாக முடியாது என கே ராஜன் கூறினார். இதை வைத்து நெட்டிசன்கள் வழக்கம் போல அவர்களுடைய கருத்துக்களை பதிய ஆரம்பித்து விட்டனர் .இப்பொழுது தான் திமுகவுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து இருக்கிறார். அப்போ வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அழிவு காலம் தானோ என கிண்டலாக கமெண்ட்களை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்