ரஜினியின் படத்தை பார்ப்பதற்கு முன்பே அந்தப் படம் பெரும் தோல்வி என வைரமுத்து சொன்னதாக கலைப்புலி எஸ் தாணு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைப்புலி எஸ்.தாணு. ரஜினி கமல் அஜித் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் பல படங்களை தயாரித்து அதில் வெற்றியும் கண்டவர்.
ஏவிஎம் நிறுவனத்திற்கு பிறகு இவர்தான் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலம் வாய்ந்த தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் வைரமுத்துவை பற்றி அவர் கூறிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கிழக்கு சீமையிலே படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார்.
அந்த சமயத்தில் வைரமுத்துவுக்கான சம்பளத்தை கொடுக்க அவர் வீட்டுக்கு சென்று இருந்தாராம் கலைப்புலி எஸ் தாணு. அவருக்கு அவருடைய சம்பளமாக 50,000 தொகையை எடுத்துக்கொண்டு அவர் கையில் கொடுத்திருக்கிறார். அப்போது வைரமுத்து பாரதிராஜாவின் படங்களுக்கு நான் சம்பளமே வாங்குவதில்லை.
அதற்கான மொத்த தொகையையும் கொடுத்து விட்டீர்கள் எனக் கூறி அதை வாங்கிக் கொண்டாராம். இப்படி எனக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பு இருந்ததாக அந்த பேட்டியில் கூறினார் கலைப்புலி எஸ்.தாணு. ஆனால் இப்படி இருக்கும் பட்சத்தில் கபாலி பட ரிலீஸ் சமயத்தில் அவர் கூறிய ஒரு செய்தி தான் என வருத்தத்தில் ஆழ்த்தியது என கூறினார்.
அதாவது கபாலி படத்தை வைரமுத்து பார்ப்பதற்கு முன்பாகவே ஒரு பத்திரிக்கையாளர் பேட்டியில் ‘கபாலி படம் பெரும் தோல்வி’ எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஏன் அப்படி கூறினார் என தெரியவில்லை .அவர் கூறியதும் மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கைத்தட்ட மறுபடியும் அந்த வார்த்தையை கூறினார். ஏன் அந்த படம் தோல்வி என வைரமுத்து கூறினார் என இன்று வரை தெரியவில்லை என கலைப்புலி எஸ் தாணு கூறி வருத்தப்பட்டார்.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…