சிம்புவின் நடிப்பில் கமல் தயாரிப்பில் ஒரு படம் தயாராகப் போகிறது என்ற செய்தி வெளியானதும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரே சந்தோஷம். அதுவும் சிம்புவின் கம்பேக்கிற்கு பிறகு அடுத்தடுத்து மாஸான படங்களில் நடித்தால் அஜித்,
விஜய் இவர்களுக்கு பிறகு கண்டிப்பாக சிம்பு அந்த வரிசையில் வந்துவிடுவார் என்று அவர் ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அறிவிப்பு வெறும் அறிவிப்புடனேயே நின்று போனது. எந்தவொரு வேலையும் ஆரம்பிக்கப்படாமல் அப்படியே இருந்தன. அதன் பிறகு திடீரென கமல் மணிரத்னம் கூட்டணியில் சிம்பு ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்று யாரும் எதிர்பாராத ஒரு செய்தி வெளியானது.
இதுவும் ரசிகர்களுக்கு ஒரு இன்பதிர்ச்சியாக மாறியது. தக் லைஃபில் சிம்புவா? அதோடு கமலுடன் ஒரே ஸ்க்ரீனில் சிம்புவையும் பார்க்கும் போது ரசிகர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின் திடீரென சிம்பு 48 படத்தில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகிக் கொள்கிறது என்ற ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியானது. ஏனெனில் படத்தின் பட்ஜெட் கருதி இந்தப் படத்தில் இருந்து ராஜ்கமல் விலகிக் கொள்வதாக கூறியது. அதனால் இந்த சிம்பு 48 படத்தை தன் சொந்த ப்ரடக்ஷனிலேயெ சிம்பு தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கூறும் போது ‘கமல் இந்த முடிவை யோசித்து எடுத்திருந்தால் நல்ல முடிவு என்றுதான் சொல்வேன். ஏனெனில் சிம்புவை வைத்து எல்லாம் படம் எடுக்க முடியாது. கமலை குழி தோண்டி புதைச்சிருவார் சிம்பு. சிம்புவால் நல்லா இருந்தவர்கள் என யாருமே இல்லை. ’
‘அதனால்தான் சொல்றேன். கமல் எடுத்த முடிவு நல்ல முடிவுதான். எனக்கும் டி. ராஜேந்திரனுக்கு நல்ல நட்பு இருக்கிறது. அதற்காக சிம்புவை பற்றி நல்ல முறையில் சொல்ல வேண்டும் என்பது இல்லை. உண்மையைத்தான் சொல்வேன்.’ என மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…