Categories: Cinema News latest news

நிஜத்துலயும் களை எடுக்குறதுல இந்தியன் தாத்தா கில்லாடிதான்… தெறிக்க விடும் மீம்ஸைப் பாருங்க..!

களை எடுத்தால் தான் இந்தியா முன்னேறும். அதுக்காகத் தான் இந்தக் கொலைன்னு லஞ்சப்பேர்வழிகளை ஒவ்வொருவராக கொலை செய்வார் இந்தியன் தாத்தா. அதைப் படமாக்கிய விதமும், திரைக்கதை அமைத்த விதமும் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதுதான் இந்தியன் படத்தின் மகத்தான வெற்றிக்குக் காரணம். இந்தியன் படத்தின் முதல் பாகம் எவ்வளவு வெற்றிகரமாக அமைந்ததோ அதற்கு நேர் எதிராக அமைந்து விட்டது இந்தியன் 2. இந்தப் படத்தின் தோல்வியை ட்ரோல் செய்தனர். மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளத்தில் ஷங்கரையும், கமலையும் வச்சு செய்தனர்.

இந்தப் படத்தின் தோல்விக்குக் காரணம் படத்தின் நீளம் என்றார்கள். ஷங்கர் 2ம் பாகத்தை 5 மணி நேரம் எடுத்துவிட்டார். அதனால் படத்தை 2 மற்றும் 3ம் பாகம் என எடுக்கத் திட்டமிட்டார். 2ம் பாகத்தை விட 3ம் பாகம்தான் படு விறுவிறுப்பு. அதே நேரம் 2ம் பாகம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

இதுவே இப்படி என்றால் 3ம் பாகத்தைத் திரையிட யார் முன்வருவார்கள்? இது இப்படி இருக்க படத்துக்கு இன்னும் பட்ஜெட் தேவை என்ற ஷங்கரின் கோரிக்கை நிறைவேறவில்லை போலும். அதனால் படத்தை ஓடிடியில் தான் வெளியிடுவார்கள் என்றும் சொல்கின்றனர். கமலே 3ம் பாகத்தின் கதை தான் நல்லாருக்கு என்றும் சொல்லி அதனால் தான் படத்தில் நடிக்க முன்வந்தேன் என்றும் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. இதற்கிடையில் ஷங்கர் கேம் சேஞ்சர் என்ற தோல்விப்படத்தையும் கொடுத்து விட இந்தியன் 3 கவனிப்பாரற்ற நிலைக்குப் போனது.

அந்த வகையில் இந்தியன் 3 இப்படியே கிடப்பில் கிடக்க மணிரத்னம் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்க இணைகிறோம் என தக் லைஃப்பை எடுத்தார். படம் படுபிளாப் ஆனது. சமூகவலைதளங்களில் அவரையும், ஷங்கரையும் வறுத்து எடுத்தனர். கமலுக்கு தோல்வி பெரிய அளவில் பாதிப்பில்லை.

ஏன்னா அவரு நிறைய வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். அதனால் இப்போது கமலை வைத்து ஷங்கரையும், மணிரத்னத்தையும் மீம்ஸ்கள் போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள். அப்படி ஒரு மீம்ஸ்தான் இது. நான் வேணும்னே குப்ப படம் குடுக்கல. களை எடுத்துட்டு இருக்கேன்னு இந்தியன் தாத்தா கமல் நிழல்கள் ரவியைக் கொலை செய்யும் சீனை எடுத்துப் போட்டு விட்டு அதில் கமலை ஆண்டவர் என்றும் நிழல்கள் ரவியை ஷங்கர், மணிரத்னம் என்றும் போட்டு விட்டார்கள்.

இந்த மீம்ஸைப் பார்க்கும்போது கமல் வேணும் என்றே தான் இந்தியன் 2, தக் லைஃப் மாதிரியான குப்பைப் படங்களில் நடித்துள்ளார் என்றும் அதெல்லாம் மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களை களை எடுக்கத்தான் என்றும் சொல்வது போல உள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v