Categories: Cinema News latest news

நிறைவேறாமல் போன கமல் ஆசை… அதனால் தான் 237வது படத்துக்கு இயக்குனர் அவர்களா?

நடிகர் கமல், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து ஜூன் 5ல் படம் ரிலீஸ் என்றும் தெரியவருகிறது.

கமல் தற்போது அமெரிக்காவிற்கு ஏஐ டெக்னாலஜி குறித்துப் படிக்கச் சென்றுள்ளார். தொடர்ந்து இந்த மாத இறுதியில் வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு கமல் தனது 237வது படத்தில்அன்பறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

விக்ரம் தர்மா: கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா. அவரை எப்படியாவது இயக்குனராக்க கமல் விரும்பினாராம். அவரது இயக்கத்திலும் நடிக்கணும்னு ஆசைப்பட்டாராம். ஆனால் அதற்குள் விக்ரம் தர்மா இறந்து விட்டார்.

அஞ்சலி: அதனால அந்த வாய்ப்பை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவுக்குக் கொடுத்து அந்தப் படத்தில் நடிக்கணும்னு நினைத்தாராம். அதுதான் இந்தப் படம். இது கிட்டத்தட்ட விக்ரம்தர்மாவுக்குக் கமல் கொடுக்குற அஞ்சலின்னே கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறதாம்.

இந்தியன் 2, தக்லைப், இந்தியன் 3, கூலி, படங்களுக்கும் இவங்க தான் ஸ்டண்ட் மாஸ்டர். மார்ச் 5ம் தேதிக்கு மேல் அன்பறிவு இயக்கத்தில் கமலின் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பறிவு: இந்தியன்2, விக்ரம் ஆகிய படங்களில் கமலுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு செய்த பணி ரொம்பவே பிடிச்சிருந்ததாம். அனிருத்தை வைத்தும் அவர்கள் படம் இயக்கவதாக இருந்து அது டிராப் ஆகிடுச்சாம். இதைக் கேள்விப்பட்ட கமல் எனக்கு ஏதாவது கதை இருக்கான்னு கேட்டாராம். அப்படி உருவானதுதான் இந்தப் படம் என்றும் சொல்லப்படுகிறது.

மருதநாயகம்: கமல் தற்போது அமெரிக்காவில் இருந்து ஏஐ தொழில்நுட்பத்தை முழுமூச்சாகக் கற்றுக் கொண்டு வருகிறார். வெகு விரைவில் அவருக்கு டிராப்பான லட்சியப்படமான மருதநாயகத்துக்கு இந்த தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஏஐ டெக்னாலஜி: அந்தப் படத்தை ஏஐ டெக்னாலஜி உதவியுடன்தான் இனி எடுக்க முடியும். ஏன் என்றால் கமலை திரும்ப இளமையாகக் காட்ட அது ஒன்றே வழி. மேக்கப் எவ்ளோதான் போட்டாலும் அந்த வேகம் கிடைக்காது. அந்தப் படத்தில் செய்த சாகசங்களை இந்த வயதில் கமல் செய்ய முடியாது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் மருதநாயகமும் வெளிவர வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v