Categories: Cinema News latest news

பொய் சொல்றா… ஆள விட்டு அடிக்க வச்சா… எல்லாம் அதுக்காகத்தான்…! கனகா அப்பா எமோஷனல்!

கரகாட்டக்காரன் படத்தில் நடித்துப் பெயர் பெற்றவர் நடிகை கனகா. இவரது வாழ்க்கையே புரியாத புதிர் ஆகி விட்டது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போலத் தான் ஆகிவிட்டது. இவரது அப்பா தேவதாஸ். இவர் ஒரு இயக்குனர். யூடியூப் சானல் ஒன்றுக்கு ஆழ்ந்த மன வருத்தத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

நான் ஒரு இயக்குனராக முன்னுக்கு வரணும்னு சினிமாவுக்கு வந்தேன். என்னை ஒரு கதாநாயகிக்கு கணவராக வரும்படி ஆகிவிட்டது. அதனால் வந்த வினைதான் ஒதுங்கி இருக்க வேண்டியுள்ளது. எங்க குடும்பத்துல 50 பேரு இருக்காங்க. ஒரு நல்லவருக்கு 100 கெட்டவங்க இருக்காங்க. ஒரே ஒரு நல்லவர் என்னைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

கனகாவுக்கு நான் எவ்வளவோ அட்வைஸ் பண்ணினேன். ஆறாவது வரை படிச்சதா சொல்றா. உங்க அம்மா போய்விட்டதால நீ தனியா இருக்குறது நல்லது இல்லன்னேன். உனக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வச்சி எனக்காக ஒரு வாரிசை உருவாக்குனா என்னன்னு கேட்டேன். அதுக்கு ‘நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க’ன்னு சொன்னா.

3 வயசு இருக்கும்போது கனகாவ பார்த்தது. என்னைப் பார்க்க விட மாட்டாள் தேவிகா. அவளுக்கு உடல்நிலை சரியில்லாம ஹார்ட் அட்டாக் இறந்துட்டாள். உயில் எழுதி வைக்கல. கனகாவுக்கு யாரோ தவறான பாதையைக் காட்டி உயில் எழுதுன மாதிரி தேவிகாவோட கையெழுத்தைப் போட்டுட்டாங்க. யாரு எழுதுனதுன்னு தெரியாது. ஆனா முறைப்படி எழுதி 2 சாட்சிகள் கையெழுத்துப் போட்டுருக்காங்க.

ஆனா அதுக்கு முன்னாடி தேவிகா இந்த வீட்டு சம்பந்தமா கேஸ் போட்டாள். நான் ஜெயிச்சிட்டேன். அதே மாதிரி கனகாவும் கேஸ் போட்டாள். அதுல அந்த உயில் பார்க்கும்போது கையெழுத்து மாறி இருந்தது. கோர்ட்ல வச்சி கனகா ‘நீங்க யாரு?’ன்னு கேட்டாள். ‘ஆமாம்மா நான் யாருன்னு உனக்கு சொல்ல வேண்டி இருக்கு. (என்னையே அவளுக்கு அடையாளம் தெரியல.) அந்தளவு உங்க அம்மா உன்னை அறிவோடு வளர்த்துருக்கா’ன்னு சொன்னேன்.

நான் தான் உங்க அப்பான்னு சொன்னேன். அன்னைக்கு மட்டும் 100 முறை என்னை அப்பான்னு சொன்னாள். என்னை தேவிகா மர்டர் பண்ற அளவுக்கு வந்தாள். ஆள வைச்சி அடிக்க வச்சா. போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தாள். எல்லாம் சொத்துக்காகத்தான்.

எனக்கு பேரு வந்துடுச்சு. நான் பீம்சிங் சார்கிட்ட கடைசி உதவியாளர். பாவமன்னிப்பு டைட்டில்ல என் பேரு 5வது இருக்கும். 59ல களத்தூர் கண்ணம்மால இருந்து எனக்கு ஆரம்பம். 67வரைக்கும் பீம்சிங் சார் கூட இருந்தேன். அப்போ என் தலை எழுத்து மாறியது என்கிறார் இயக்குனர் தேவதாஸ்.

என்னைக் கல்யாணம் பண்ணினா நான் செத்துப் போயிடுவேன்னு தேவிகா அழுதாள். நான் 200 ரூபா சம்பளக்காரன். நீ 1000 ரூபா சம்பளம் வாங்குறே. உன் தகுதிக்கு ஏற்றவரைக் கட்டிக்கோன்னு சொன்னேன். ஆனாலும் அவரே காதலிச்சி என்னைக் கல்யாணம் முடிச்சார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v