Connect with us

Cinema News

நல்ல மனிதரே கிடையாது.. சின்மயி விஷயத்தில் வைரமுத்துவை வறுத்தெடுத்த கங்கை அமரன்

மீடூ பிரச்சனையில் வைரமுத்துவை பற்றி பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சின்மயி. அது மட்டுமல்ல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கும் சின்மயி டப்பிங் யூனியனுக்கு ஆண்டு சந்தா கட்டவில்லை என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இனிமேல் அவர் பாடவும் கூடாது டப்பிங் பேசவும் கூடாது என தமிழ் திரையுலக டப்பிங் யூனியன் சின்மயிக்கு தடை விதித்தது.

அதிலிருந்து தமிழ் படங்களில் அவர் பாடவும் இல்லை. டப்பிங் பேசவும் இல்லை. கடைசியாக லியோ படத்தில் திரிஷாவுக்காக டப்பிங் பேசி இருந்தார். அது பெரிய சர்ச்சையாக மாறியது. ஆனால் மற்ற மொழிகளில் அவர் பாடி வருகிறார். டப்பிங் பேசி வருகிறார். கடைசியாக தக்லைப் பட இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை என்ற பாடலை மேடையில் பாடியதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் சின்மயி.

அதிலிருந்து சமூக வலைதளங்களில் சின்மயி மிகவும் ட்ரெண்டிங்காக மாறினார். இப்போது பல youtube சேனல்களில் அவர் தான் எங்கு பார்த்தாலும் தெரிகிறார். அந்த வகையில் கங்கை அமரன் சின்மயிக்கு ஆதரவாக பல விஷயங்களை ஒரு youtube சேனலில் பேசி இருக்கிறார். வைரமுத்து பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார் கங்கை அமரன். வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி அந்த பிரச்சினையை கொண்டு வந்த போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அவருக்கு எதிராக தான் நின்றது.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார் சின்மயி. அப்படி இருக்கும் பொழுது இன்று அவருக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார் கங்கை அமரன். அவர் சின்மயி பற்றி கூறும் பொழுது சிறு வயதிலிருந்தே இவரை நான் பார்க்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த துறையில் இணைந்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் இளையராஜா வைரமுத்து கூட்டணி என்றால் ஒரு வெற்றி கூட்டணியாக இருந்தது.

அதற்காக வைரமுத்து பண்ற தப்ப கேட்காமல் விட முடியுமா? அதை விட்டுவிட்டு அவரை பற்றி எல்லாம் நீ குறை சொல்லக்கூடாது. ரொம்ப நல்லவர் என சின்மயி பார்த்து கேட்க சொல்கிறீர்களா? அநியாயம் நடந்தது நடந்ததுதான். உலகத்துக்கு தெரிந்ததுதான் .அசிங்கப்பட்டது உண்மைதான். அதுக்கான தண்டனை என்ன ?விதிக்கப்பட்டிருக்கிறது. அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு ஒரு பொண்ணு நிற்கிறாள் என்றால் அதற்கு ஆதரவாக நிற்க நான் ரெடி.

ஒரு உத்தமமான பொண்ணுக்கு நடந்த அநியாயத்தை அவர் வாயிலிருந்து சொல்லும் பொழுது அதை எடுக்காத சட்டத்தையும் அதற்கு ஆதரவாக இருக்கும் கட்சியையும் நான் எதிர்க்கிறேன். ஏனெனில் இது எடுக்க வேண்டிய ஒரு முடிவு .எவ்வளவு காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். எத்தனையோ பல நல்ல பாடல் வரிகளை கொடுத்திருக்கிறார். அவர் நல்ல கவிஞர்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நல்ல மனிதன் கிடையாது என கங்கை அமரன் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top