தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சு இப்போது கொழுந்துவிட்டு எரிகின்றது. ஒட்டுமொத்த கர்நாடகமும் கமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி நின்றனர். கர்நாடக உயர் நீதிமன்றமும் கமலை சரமாரியாக கேள்விகளை கேட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல் அவருடைய நிலைப்பாடில் உறுதியாக நின்றார்.
அதன்பிறகு ஒரு பக்க அளவில் கடிதம் ஒன்றையும் எழுதி கொடுத்தார் கமல். அதில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ரிலீஸை தள்ளி வைக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. அதோடு இந்த வழக்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீதிமன்றம் ஒத்தி வைத்து தீர்ப்பளித்தது.
இப்படி ஒரு கொந்தளிப்பு இருந்தபோதிலும், ஒரு நம்பிக்கையான திருப்பம் தற்போது உருவாகியுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலு மூலம், கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் கமல்ஹாசனின் வலுவான ரசிகர் பட்டாளத்தை ஒப்புக்கொண்ட சேம்பர், இந்த விஷயத்தைத் தீர்க்க அமைதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி, மேலும் மோதல்கள் இல்லாமல் ‘தக் லைஃப்’ தங்கள் மாநிலத்தில் வெளியிடப்படுவதை உறுதி செய்வதில் ஆர்வத்தைத் தெரிவித்திருக்கிறது.
இதனால் சுமூக பேச்சு வார்த்தை கண்டு நாளை உலகெங்கிலும் தக் லைஃப் படம் ரிலீஸாகும் என ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழுக்காகத்தான் இவ்வளவு பிரச்சினை இருந்தாலும் இங்குள்ள பிரபலங்களோ மொழியியல் ஆய்வாளர்களோ கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது .
TVK VIJAY…
Dhanush: இட்லி…
Vijay: கரூர்…
Kaur: கடந்த…
Vijay TVK:…