Connect with us

Cinema News

தவறாக புரிந்து கொண்டதுக்கு எதற்கு மன்னிப்பு….? கெத்து காட்டிய கமல்! வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்

கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது. கமலின் கன்னட மொழிப் பிரச்சனையால் இழுபறி நீடித்தது. இன்று அங்கு கமல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்?

இதனால் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ளது. அமைதியின்மை நிலவுகிறது. தமிழ் மொழியில் இருந்து கன்னடம் வந்தது என சொல்வதற்கு அவர் என்ன வரலாற்று ஆய்வாளரா என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் உடனடியாக நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டது வேதனை அளிக்கிறது.

கன்னடத்தை நான் சிறுமைப்படுத்தவே இல்லை என்று பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இதன் தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து கமல் தவறாக புரிந்து கொண்டதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

பிலிம் சேம்பர் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படும் வரை தக் லைஃப் வெளியீடு இல்லை என்றும் இந்த வழக்கு 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் திருப்பூர் சுப்பிரமணியம் என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.

கமலின் கருத்து 100 சதவீதம் நேர்மையானது. இந்த விழாவில் ராஜ்குமாரைப் பற்றி ரொம்ப மேன்மைப்படுத்தித்தான் பேசி இருந்தாரு. கன்னட மொழியையும், அங்குள்ள மக்களையும் சிறப்பாகவே பேசி இருந்தார். கமல் தமிழ்மொழியின் சிறப்பைத் தான் பேசி இருந்தாரே தவிர கன்னட மொழியை எந்த இடத்திலும் சிறுமைப்படுத்திப் பேசவே இல்லை.

கர்நாடகாவைத் தவிர வேறு மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டுல எந்த மொழிப்படங்களையும் நாங்க ரிலீஸ் பண்ண மாட்டோம்னு சொன்னது கிடையாது. கர்நாடகாவில் மட்டும் தான் இதுபோன்ற பிரச்சனை வருகிறது. கர்நாடக பிலிம் சேம்பர் தெரிவித்த கருத்து வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top