Categories: Cinema News latest news

அப்துல்கலாம் பயோபிக்கில் தனுஷ்.. அது இப்ப வேணாம்! என்ன இப்படி சொல்லிட்டாரு கஸ்தூரிராஜா

தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரிராஜா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் காப்பிரைட்ஸ் குறித்து அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இன்னும் குட் பேட் அக்லி படத்தில் அந்த மூன்று பாடல்கள் பிரச்சனையில் தான் இருக்கின்றன. இப்பொழுது உள்ள இசையமைப்பாளர்களுக்கு யோசிக்க கூடிய வகையில் திறன் இல்லையோ என்னவோ?

பழைய பாடல்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும். வருங்காலத்தில் அதற்கான ஒரு சட்டம் கூட வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று சமீப காலமாக ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படங்களில் நூற்றுக்கு 99 படங்கள் தோல்வி படங்களாகவே அமைகின்றன. ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் எந்த ஒரு இயக்குனர்களும் படங்களை இயக்குவதில்லை.

அந்த அளவுக்கு கதை ஆசிரியர்கள் இடமும் வெற்றிடமாக தான் இருக்கின்றன. வசனகர்த்தாக்கள் இடமும் வெற்றிடமாக தான் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது ரிலீஸான மாமன் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்கள் ஹோம்லி ஸ்கிரிப்ட் அடிப்படையில் வந்ததனால் மக்கள் அந்த படங்களை பார்க்க கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இனி அந்த மாதிரி படங்கள்தான் வரவேண்டும் என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இப்போது உலகமே வியக்கும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன் அப்துல் கலாம். அவருடைய பயோபிக்கில் தனுஷ் நடிக்கிறார். இதைப்பற்றி உங்களுடைய கருத்து எனக்கு கேட்ட போது அது இப்ப வேணாம். இப்பொழுது பேசினால் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் .ஆனால் பெருமையாக இருக்கிறது. எப்பேர் பட்ட மனிதர் .நம் ஒவ்வொரு உயிரிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர் அப்துல் கலாம். அவருடைய பயோபிக்கில் என்னுடைய மகன் நடிப்பது நான் பெருமையாக கருதுகிறேன் என கூறினார் கஸ்தூரி ராஜா.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்