Actor Kavin: விஜய் டிவி மூலம் சினிமாவில் நுழைந்தவர் கவின். விஜய் டிவியில் சில நாடகங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் உருவானார்கள். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக சில படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் படம் முழுக்க வரும் முக்கிய வேடம் கிடைத்தாலும் அந்த படங்கள் ஓடவில்லை. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அந்த வீட்டில் இருந்த லாஸ்லியாவை காதலித்தார். பிக்பாஸ் வீட்டிலேயே அந்த காதல் முடிவுக்கு வந்தது.
லிப்ட் எனும் படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் கவினை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தது. சாஃப்ட்வேர் கம்பெனியில் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் பேயாக மாறி பயமுறுத்தும் கதையில் கவின் நன்றாகவே நடித்திருந்தார். அதன்பின் வெளிவந்த டாடா படமும் கவினுக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது.
புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்ற ஆணும், பெண்ணும் எப்படி சேருகிறார்கள் என்பதான் இப்படத்தின் கதை. இந்த படம் ஹிட் அடிக்க கவினின் மார்க்கெட் ஏறியது. அடுத்து ஸ்டார் என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய அளவுக்கு புரமோஷன் செய்யப்பட்டது. அடுத்த விஜய் கவின்தான் என சிலர் பில்டப்பும் செய்தார்கள். படத்திலும் அப்படி காட்சிகள் இருந்தது.
ஓவர் பில்டப்பால் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்து வெளிவந்த பிளடி பெக்கரும் ஓடவில்லை. இந்நிலையில்தான், ஆண்ட்ரியாவுடன் இணைந்து மாஸ்க் என்கிற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என நம்பி காத்திருக்கிறார் கவின்.
மாஸ்க் படம் தொடர்பான போஸ்டர்களை பார்க்கும்போது கண்டிப்பாக வித்தியாசமான ஒரு திரில்லர் படமாக இது உருவாகியிருக்கும் என கணிக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் ஜிம் கேரி நடிப்பில் வெளிவந்த மாஸ்க் படத்தை சுட்டு எடுத்திருக்கிறார்களா என்கிற சந்தேகமும் வருகிறது. எப்படி இருந்தாலும் கவினின் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை விகர்னன் அசோக் என்பவர் இயக்கியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்துள்ளார். எனவே, இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…