Categories: Cinema News latest news

எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க!. எல்லாம் அவளுக்குதான்!.. கடுப்பில் டிராகன் பட நடிகை!…

சினிமான்னாலே ஒரு வசீகரம்தான். அதே மாதிரி சினிமா மோகத்துல உள்ளவங்களை எப்படியாவது வசீகரிச்சி எதை எதையாவது சொல்லி அவங்களை நடிக்க வச்சிடுவாங்க. அப்புறம் சொன்னது ஒண்ணா இருக்கும். படம் வந்ததுக்கு அப்புறம் பார்த்தது ஒண்ணா இருக்கும். சமீபத்தில் கூட நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் எங்கிட்ட அவங்க சொல்லும் போது சாம்பார் சாதம்தான்னு சொன்னாங்க. ஆனா எனக்குக் கிடைச்சதோ தயிர்சாதம்னு காமெடியா சொன்னாரு.

அது மாதிரிதான் படத்துல நடிக்க வைக்கிறதுக்காக நடிகர்கள் மட்டுமல்ல நடிகைகளும் சில சமயங்களில் ஏமாற்றப்படுறாங்க. அந்த வகையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் டிராகன். இந்தப் படத்தில் நடித்தவர்தான் அனுபமா பரமேஸ்வரன்.

ஆனால் படத்தில் 2 கதாநாயகிகள் என்பது முதலில் அவருக்குத் தெரியாது. அடுத்து வந்த கயாடு லோஹர் கேரக்டருக்குத் தான் அதிக முக்கியத்துவம் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்அனுபமா. இதனால்தானோ என்னவோ அவர் படம் சம்பந்தமான விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

அனுபமா படத்தோட வெற்றி விழாவுக்கும் சரி. பிரஸ்மீட்டுக்கும் சரி. எங்கயும் வரவே இல்லை. ஆக்சுவலா அவருக்கு தவறான நம்பிக்கையைக் கொடுத்துட்டதா சொல்றாங்க. இன்னொரு ஹீரோயின் இருக்காங்கங்கறதை சொல்லாம இவங்கள வந்து உள்ளே கொண்டு வந்துடுறாங்க.

கதை சொல்லும்போது இது எப்பவுமே நடக்கறதுதான். ஆர்டிஸ்டுக்கிட்ட கதை சொல்லும்போது அவங்கதான் ரொம்ப முக்கியமான கேரக்டர் அப்படிங்கற மாதிரி சொல்வாங்க. கடைசியா பார்த்தா அவங்கள விட முக்கியமான கேரக்டர் வேற ஒண்ணு இருக்கும்.

படமா வரும்போதுதான் அவங்களுக்குத் தெரியும். இதை வந்து ரொம்ப ஸ்ட்ராங்கா நம்பிருக்காங்க. ஆனா அந்தக் கேரக்டர் உள்ளே வந்து இவங்களோட முக்கியத்துவத்தைப் பாதிச்சிடுச்சு. அதுல வந்து இவங்களுக்கு ரொம்பவே வருத்தம். அதை வெளிப்படையாவே பகிர்ந்ததாக எல்லாம் தகவல் இருக்கு.

‘நீங்க வந்து என்னை ஏமாத்திட்டீங்க. எனக்கு வந்து அப்படி இப்படின்னு சொல்லிட்டீங்க. படத்துல எனக்கு போர்ஷனே ரொம்ப கம்மியா இருக்கு. அந்தப் பொண்ணு போர்ஷன்தான் அதிகமா இருக்கு’ன்னு சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v